Breaking News
Home / செய்திகள் / மாவட்ட நுகர்வோர் கூட்டம்

மாவட்ட நுகர்வோர் கூட்டம்

06-03-2020 வெள்ளிக் கிழமை திருச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியல் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர்.மாவட்ட வழங்கல் அலுவலர். மற்றும் அனைத்து துறை அதிகாரிகள்.தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் மனிதவிடியல் முனைவர் பி.மோகன் மாவட்ட அமைப்பாளர் முனைவர் பி.சங்கர்.  நுகர்வோர் தலைவர்கள் சேகரன்.உமா முத்துசாமி மதுமிதா.சகுந்தலா சீனிவாசன். கலந்து கொண்டனர்.

தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் மனிதவிடியல் முனைவர் பி.மோகன்.அவர்களால் விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள்.

1. தெப்பக்குளம் பாஸ்ட் ஆபிஸ் பகுதியில்   போக்குவரத்து நெரிச்சலை கட்டுபடுத்த சப்-வே அமைக்க வேண்டும்

2. இ.பி.ரோட்டில் பயணிகள் பஸ் போக்குவரத்து தடையில்லாமல்  செல்ல வழி வகுக்க வேண்டும்.

3. அன்னாசாலை ரவுன்டானா போக்குவரத்து பாதை விரிவுபடுத்த வேண்டும்.

4. காந்திமார்கட் வளைவில் இருந்து மலைக்கோட்டை கோவில் வரை இருபுறமு்ம் சாக்கடையை தூர்வாரி கட்டைக்கட்டி  சுகாதார சீர் கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. புத்தூர் நால்ரோடு முதல் உய்யகொண்டான் வரை இரு புறமும் ரோடை அகலப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

6. வயலூர் ரோடு கீதாநகர் பஸ்டாபில் கூடும் கட்டிடபணியாளர்களை போக்குவரத்து நெரிச்சல் இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும்.

7. அணைத்து துறைகளிலும் நுகர்வோர் பிரதிநிதிகள் கூட்டம் தவறாமல் நடத்த வேண்டும்.

8.  தண்ணீர் பற்றாகுறையால் தரமற்ற தண்ணீர் கேன்களில் விநியோகம் செய்கின்றார்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. அனைத்து ரேஷன் கடைகளில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கவேண்டும்.

மனிதவிடியல் முனைவர் பி.மோகன்.

About Mohan P

Check Also

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல்

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று அறிவித்ததை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *