Breaking News
Home / செய்திகள் / திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அடாவடி சுங்க வசூல்* *தாராபுரம் நகராட்சியின் கமிஷனரிடம் வியாபாரிகள் புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அடாவடி சுங்க வசூல்* *தாராபுரம் நகராட்சியின் கமிஷனரிடம் வியாபாரிகள் புகார்

*திருப்பூர் மாவட்டம்*
*தாராபுரத்தில் அடாவடி சுங்க வசூல்* *தாராபுரம் நகராட்சியின் கமிஷனரிடம் வியாபாரிகள் புகார்*

*திருப்பூர் தாராபுரம் நகராட்சியில்* *வியாபாரிகளை கட்டாயப் படுத்தி சுங்க வசூல் செய்வதாக* *வியாபாரிகள் புகார்* *தெரிவித்தனர்*தாராபுரம் வர்த்தக கழக தலைவர் ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் நகராட்சி கமிஷனரை சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது*தாராபுரம் நகராட்சியில் தினசரி மார்க்கெட் மற்றும் பஸ் ஸ்டாண்ட் சுங்கம் எடுத்தவர்கள்*
சிண்டிகேட் அமைத்து உள்ளனர் தினசரி மார்க்கெட்டில் காய் கறிகள் உட்பட இதரவிவசாய விளை பொருட்களுக்கு சங்க கட்டணம் நிர்ணயித்து பட்டியல் நகராட்சி*
*சார்பில்வைக்கப்பட்டுள்ளது . இந்தப் பட்டியலில் விநியோகஸ்தர்கள் கடைக ளுக்கு சப்ளை செய்யும் உணவு*பொருட்கள் , அழகு சாதனங்கள் , சோப் போன்றவைகள் பட்டியலில் இல்லை . இல்லாத உணவுப் பொருள்களுக்கு அதிரடி யாக சுங்கம் வசூலிக்கின்றனர்* .மேலும் தாராபுரம் உழவர் சந்தை அருகே உள்ள தரைகடை , பொள்ளாச்சி ரோடு உட்பட நகர் பகுதியில் உள்ள தள்ளு வண்டிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள* *காய்கறி கடைகளில் கூட குண்டர்களை கொண்டு கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர் காய்கறிகளை*கொண்டு வரும் விவசாயிகளிடமும் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிக் கப்படுகிறது . ஏற்கனவே விநியோகிஸ்தர்கள் பில் போட்டு ஜிஎஸ்டி உட்பட வரிகளை கட்டி முறையாக தொழில் செய்து வருகின்றனர் . விநியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் . நகராட்சி கமிஷனர் இந்த விஷயத்தில் தலையிட்டு முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் . நடவடிக்கை எடுக்க தாமதமானால் சங்கத்தின் சார்பில் சப் – கலெக்டர் மற்றும் திருப்பூர் மாவட்டஆட்சியரிடம் சந்தித்து முறையிடுவது என முடிவு செய்துள்ளோம்*. *இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டி ருந்தது*
. *மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி*
*கமிஷனர் சங்கர்* *நடவடிக்கை* *எடுப்பதாக*
*வியாபாரிகள் சங்க* *தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்*
இதுகுறித்து சமுகஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது* கடந்து வருடமும் இதேபோல் அப்போதைய ஆணையாளர் லட்சுமண் அவர்களிடம் வியாபாரிகள்* *முறையிட்டார்கள் அது குறித்து ஆணையாளர் அவர்கள்* *தினத்தந்தி,நாளிதழ் அளித்த செய்தியில் முறைகேடக வசூல் செய்தால் காவல்துறை முலமாக நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்*கொஞ்ச நாள் அமைதியாக இருந்து விட்டு மீண்டும்* *அடாவடி,வசூலில் இறங்கிஉள்ளார்கள் தாராபுரம் பஸ்நிலையத்தில் உள்ள பிச்சை எடுப்பவர்களிடமும்*சுங்க வசூல்* *செய்கிறார்கள்* *இதை தடுக்கபடவேண்டும் வேண்டும் எனில் தாராபுரம் நகராட்சியின் சார்பில் மார்க்கெட் அறிவிப்பு பலகை வைக்கபடவேண்டும்* *நகராட்சியின் மேலாளர் தலைமையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்*

About Mohan P

Check Also

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல்

திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று அறிவித்ததை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *