Home / செய்திகள் / சட்டம் தன் கடமையைச் செய்யத் தயங்குவது ஏன் அரியமங்கலம் காவல் நிலையம் அவலம் நீதி கேட்டு போராடும் சூசை மாணிக்கம்…

சட்டம் தன் கடமையைச் செய்யத் தயங்குவது ஏன் அரியமங்கலம் காவல் நிலையம் அவலம் நீதி கேட்டு போராடும் சூசை மாணிக்கம்…

அறுபத்தி எட்டு வயதான சூசை மாணிக்கம் மூன்று பெண் குழந்தைகளும் ஒரு மகனும் மனைவியுடன் ஜிடி நாயுடு தெரு காமராஜ் நகர் அரியமங்கலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் அந்த இடத்தின் பாகப்பிரிவினை காக திருச்சி மாவட்டம் மூன்றாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் o.S.No.1538/2012 என்ற சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இதை வீட்டின் சொத்து வரி மின் கட்டணம் ஆகியவை சூசை மாணிக்கத்தின் தாயார் பெயரில் இருந்து சூசை மாணிக்கம் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இவர்கள் இடத்தை ஒட்டி உள்ள லேத் பட்டறை நடத்தி வரும் சிவராமன் கண்ணன் ஆகியோர் சேர்ந்து கொண்டு போலி ஆவணங்கள் மூலம் சொத்து வரி மின் கட்டண ரசீது சட்டத்திற்குப் புறம்பாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிந்து அதை ரத்து செய்ய திருச்சி மாவட்டம் மூன்றாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது O.S.No.196/2020 என்ற சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது இந்நிலையில் சிவராமன் அவரது ஆட்கள் சேர்ந்து கொண்டு ஆளில்லாத நேரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக வீட்டை இடித்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர் தகவலறிந்து நியாயம் கேட்ட பொழுது அவரது ஆட்கள் கொலை செய்துவிடுவதாக மிரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உயிருக்கு போராடிய நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த அராஜகத்திற்கு புகார் கொடுத்தும் அரியமங்கலம் காவல்நிலையத்தில் நடவடிக்கை இல்லை வழக்கும் பதிவு செய்யப்படவில்லை அதற்கு மாறாக அங்கு இன்ஸ்பெக்டர் என்பவர் எதிரிகளிடம் புகார் மனு ஒன்றை பெற்றுக் கொண்டு இவர்களை மிரட்டி ஒழுங்காக வீட்டை காலி செய்து கொண்டு இல்லனா இடித்துத் தள்ளிவிட்டு உங்களுக்கு கொலை செய்து விடுவார்கள் என்றும் அவருடைய உதவி ஆய்வாளர் சிவராமன் என்பவர் ஆய்வாளர் சொல்வதைக் கேள் இல்லை என்றால் உயிரும் போய்விடும் இடமும் போய்விடும் உனது வயதுக்கு வந்த மகளை சீரழித்த சின்னாபின்னமாக்கி விடுவார்கள் ஜாக்கிரதையாக இரு என்று மிரட்டிவிட்டு இந்த கோர சம்பவம் வழக்கறிஞர் முன்னிலையிலேயே அரியமங்களம் காவல் நிலையத்தில் அரங்கேரயுள்ளது இதனால் மிகவும் பயந்து போன சூசை மாணிக்கம் அவரது மூன்று மகள்களும் இணைந்து காவல் நிலைய உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அனைவருக்கும் புகார் மனுவை நேரில் கொடுத்தும் தபாலில் அனுப்பியும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.

தொடர் போராட்டத்திற்கு பிறகு உதவி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலில் வழக்கு பதிவு செய்ய சொல்லி அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் சொல்லியும் வழக்குப் பதிவு செய்ய மறுத்து பஞ்சாயத்து பேசும் நிலை மிகவும் கொடியது கொடுமை இந்நிலையில் காவல்துறை ஆதரவுடன் அந்த வீட்டை சிவராமன் கண்ணன் மற்றும் அவருடைய ஆட்களுடன் வீட்டை இடித்துத் தள்ளி அவ்விடத்தை தன்னுடைய இடத்தோடு இணைத்து கட்டிவிட்டனர் தனது வயதிற்கு வந்த மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் பையனுடன் தங்க இடம் கிடைக்காமல் நடுத்தெருவில் நிற்கும் நிலை மிகவும் பரிதாபத்துக்குரிய ஒரு நிலை மனம் தளராமல் எப்படியும் எனக்கு நீதி கிடைக்கும் என்ற முடிவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவல் துறை ஆணையர் அவர்கள் அலுவலகம் தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கும் சூசை மாணிக்கம் கேட்பது கொலைவெறி தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயற்சித்த எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்பது மட்டுமே தற்போது ஆனால் ஆய்வாளர் அவர்கள் பணம் வாங்கிக் கொடுக்கிறேன் வழக்கெல்லாம் தேவையில்லை நீ அதை எடுத்துக்கொண்டு பத்திரமாக சென்று விடு என்று கூறுகிறாராம் காலக்கொடுமை நீதிமன்றத்தில் சட்டப்படியான வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பொழுது காவல் நிலைய ஆதரவோடு சட்டத்துக்குப் புறம்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலிலும் ஈடுபட்டு காசேதான் கடவுளடா என்ற கோட்பாட்டை கடைபிடித்து வந்த அரியமங்களம் ஆய்வாளர் தற்பொழுது இடமாற்றத்தில் சென்றுவிட்டார் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் ஆய்வாளர் சட்டபடியான நடவடிக்கை எடுத்து நியாயத்தின் பக்கம் நிற்பாரா… நாம் எதிர்பார்ப்பது சூசை மாணிக்கத்திற்கு நியாயம் கிடைக்குமா போலியாக பத்திரம் தயார் செய்து சொத்து வரி மின்சார இரசீது பெயர் மாற்றம் செய்தது ரத்தாகுமா சட்டத்திற்கு புறம்பாக இடித்து அத்துடன் இணைத்துக் கொண்டது மீட்டுத் தரப்படும் கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்கு போடப்படுமா பணம் பாதளம் வரை பாயும் அரியமங்களம் காவல் நிலையமும் தானா..? நீதி கிடைக்குமா???

About Admin

Check Also

Brand Valtrex Price. Free Worldwide Shipping. Generic Drugs Online Pharmacy

Valtrex Canadian Generic. Discount Prescription Drugs Online May I use silkcaress.com a that I might …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *