Breaking News
Home / செய்திகள் (page 10)

செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்பு

புதுடெல்லி: நாட்டின் புதிய தலைமை தேர்தல்ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்து வந்த சுஷீல்சந்திராவின் பதவிக் காலம் நேற்றுமுன்தினத்துடன் முடிந்தது. பணியில் இருந்து சுஷீ்ல் சந்திரா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவரது பதவிக் காலம் முடிந்ததையடுத்து, தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து கடந்த வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். 15-ம் தேதி …

Read More »

பாலியல் புகாரில் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சரின் மகன் தலைமறைவு

புதுடெல்லி: பாலியல் புகாரில் ராஜஸ்தான் அமைச்சரின் மகனைக் கைது செய்ய டெல்லி போலீஸார் ராஜஸ்தான் சென்ற நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவராக கருதப்படும் மாநில அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித். இவருடன் பேஸ்புக் மூலம் கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டதாகவும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் டெல்லியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் …

Read More »

பாகிஸ்தானில் 2 சீக்கியர்கள் கொலை: இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் சுமார் 15,000 சீக்கியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெஷாவர் நகரின் படாலால் பகுதியில் சுல்ஜித் சிங் (42), ரஞ்சித் சிங் (38) ஆகிய சீக்கியர்கள் மளிகை கடை நடத்தி வந்தனர். அவர்கள் இருவரும் நேற்று தங்கள் கடைகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரான மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்; ரோமில் போப் பிரான்சிஸ் வழங்கினார்: விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு நேற்று ரோமில் நடைபெற்ற விழாவில் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார். இதன் மூலம் புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை தேவசகாயம் பெற்றார். கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். நீலகண்டன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் அரசவை அலுவலராக இருந்தார். மேக்கோட்டைச் சேர்ந்த பார்கவியை திருமணம் செய்துகொண்டார். 1741-ம் ஆண்டு திருவிதாங்கூர் …

Read More »

ராமேசுவரத்தில் உள் வாங்கிய கடல்: புனித நீராட வந்த பக்தர்கள் அச்சம்

ராமநாதபுரம்: ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் உள்வாங்கியது. இதனால், புனித நீராட வந்த பக்தர்கள் அச்சம் அடைந்தனர். ராமேசுவரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் கடந்த 3 நாட்களாக வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுகின்றன. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் அக்னி தீர்த்தக் கடற்கரை, சங்குமால் கடற்கரை, மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளில் கரையில் இருந்து 10 மீட்டர் தூரத்துக்கு …

Read More »

மற்றொரு மொழியை குறைகூறுவது மற்றொரு மாநிலத்தை துன்பப்படுத்துவதாகும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை கருத்து

புதுக்கோட்டை: மற்றொரு மொழியை நாம் குறைகூறுவது, மற்றொரு மாநிலத்தை நாம் துன்பப்படுத்துவதாகும் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட அவர், அங்குள்ள சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணியை பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான சுற்றறிக்கையில் தமிழையே முதன்மைப்படுத்த வேண்டும் என்று உள்ளது. அதை நான் தெளிவுபடுத்திவிட்டேன். அதிலும், …

Read More »

திருநெல்வேலி அருகே 300 அடி ஆழ கல் குவாரியில் ராட்சத பாறை சரிந்து தொழிலாளி உயிரிழப்பு; 2 பேருக்கு சிகிச்சை: பாறைகள் சரிவதால் 3 பேரை மீட்பதில் சிக்கல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் தருவை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த கல் குவாரியில் சுமார் 300 அடி ஆழத்துக்கு தோண்டி, பாறைகள் எடுக்கப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் இரவில் கல்குவாரி பள்ளத்தினுள், 3 பொக்லைன் இயந்திரங்கள், 2 லாரிகள் மூலம் தொழிலாளர்கள் 6 பேர் பாறைகளை அள்ளிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் மேல் மட்டத்தில் …

Read More »

இந்தியாவின் முதல் அதிவிரைவு ரயிலில் நவீன ரக பெட்டிகள் இணைப்பு: பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டது

\ சென்னை: பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில், இந்தியாவின் முதல்அதிவிரைவு ரயிலான `டெக்கான்குயின்’ ரயிலுக்கு, நவீன ரக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வரும்ஜூன் மாதம் முதல் புதிய பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் சேவை தொடங்குகிறது. ‘தக்காணத்தின் ராணி’ என அழைக்கப்படும் ‘டெக்கான் குயின்’ரயில், மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு இடையே தினசரி இயக்கப்படுகிறது. பயணிகளுக்கு மிகவும் பிடித்தஇந்த ரயில், கிரேட் இந்தியன் பெனிசுலா ரயில்வே (ஜிஐபிஆர்) மூலம்,1930 ஜூன் 1-ம் தேதி வார …

Read More »

உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள் சொந்த மாநிலத்தில் படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவர்கள், பெற்றோர் வேண்டுகோள்

ரஷ்யா – உக்ரைன் போரால், உக்ரைனில் மருத்துவம் படித்துவந்தவர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர். மீண்டும் அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலையில் மத்திய, மாநில அரசுகளின் உதவிக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழக மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட உக்ரைன் எம்பிபிஎஸ் மாணவர்கள், பெற்றோர் கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உக்ரைன் எம்பிபிஎஸ் மாணவர்கள், பெற்றோர் கூட்டமைப்புத் தலைவர் எம்.ஆர்.குணசேகரன், பொதுச் செயலர் வி.கண்ணன், பொருளாளர் எஸ்.திலீப்குமார், …

Read More »

தமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக ரூ.9 கோடி மருந்துகள் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: இலங்கையில் நிலவும் பொருளா தார தட்டுப்பாடு காரணமாக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.28 கோடி மதிப்பிலான மருந்துப் பொருட்கள் அண்ணாநகரில் உள்ள மருந்துக் கிடங்கில் தயார் நிலையில் உள்ளன. இவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக்ஜேக்கப், எம்எல்ஏ எம்.கே.மோகன் உடனிருந்தனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அத்தியாவசியமான மருந்துகள், …

Read More »