Breaking News
Home / செய்திகள் (page 2)

செய்திகள்

கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுபவர்களுக்குதான் கட்சியில் முக்கிய பொறுப்பு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும் வேளாண்துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் வடலூர் தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சரும் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘ஆட்சிக்கு வந்தபின் திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றது. ஆனால் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இதுவரை …

Read More »

ம்ம்ஹும்! திமுக 10 இடத்தில் கூட ஜெயிக்காது.. அடித்துச் சொல்லும் உளவுதுறை ரிப்போர்ட்.. ஓபிஎஸ் பகீர்

சென்னை: இன்றைய நிலையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தினால் திமுக 10 இடத்தில் கூட வெல்லாது என உளவுப்பிரிவு தகவல் கூறுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதன் செயல்பாடுகளால் பொதுமக்கள் திருப்தி அடைந்துள்ளதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு மாதம் ரூ 1000 …

Read More »

ப.சிதம்பரம் இன்று மதியம் வேட்புமனு தாக்கல்: திமுக, தோழமை கட்சிகளுக்கு ட்விட்டரில் நன்றி

மாநிலங்களவைத் தேர்தலுக்கு இன்று (மே 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள ப.சிதம்பரம், திமுகவுக்கு, தோழமைக் கட்சிகளுக்கும் தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “இன்று பகல் 12 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் …

Read More »

ஆரம்பிச்சுட்டாங்கய்யா… ஆரம்பிச்சுட்டாங்க!: உதயநிதியை அமைச்சராக்க திருச்சி திமுக தீர்மானம்

திருச்சி: உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தி.மு.க., இளைஞரணி செயலாளரான உதயநிதி, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., ஆக உள்ளார். அவரை அமைச்சராக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக, அன்பில் மகேஷ், செந்தில்பாலாஜி, நேரு, சேகர்பாபு உள்ளிட்ட பலர், ஒவ்வொருவராக பேட்டி கொடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அப்போது உதயநிதி பதவியேற்பார் …

Read More »

“ஓவர், ஓவர்”.. திமுகவுக்கு எதிராக இறங்கிய அண்ணாமலை.. சொன்னபடியே கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம்

சென்னை: பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத, திமுக அரசை கண்டித்து தமிழக பாஜக, கோட்டை முற்றுகை போராட்டத்தை இன்று நடத்த உள்ளது.. இது திமுகவுக்கு எரிச்சலை கூட்டி வருகிறது. கடந்த 6 மாதத்தில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 முறை குறைத்துள்ளது… இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான மத்திய கலால் வரி …

Read More »

கைகளில் மண்ணெண்ணெய் கேன்.. கண்களில் கண்ணீர்! திமுக பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்! பரபரத்த சேலம்

சேலம் : நான்கரை கோடி சொத்து மதிப்புள்ள நிலத்தை அபகரித்துக் கொண்டு தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவியது. கைகளில் மண்ணெண்ணெய் கேன்.. கண்களில் கண்ணீர்! திமுக பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்! தமிழகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் …

Read More »

மாநிலங்களவை தேர்தல்: ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இதில் தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். மேலும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் …

Read More »

‘திமுக தன்னை எதிர்க்கும் குரல்களை ஒடுக்குகிறது’ – கார்த்திக் கோபிநாத் கைதிற்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: “திமுக தன்னை எதிர்க்கும் குரல்களை ஒடுக்குகிறது. வழக்கம் போல் போலி குற்றச்சாட்டுகள் கூறி கார்த்திக்கை கைது செய்துள்ளது” என்று யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்போதும்போல் அறிவாலயம் சில மிரட்டல் உத்திகளைப் பயன்படுத்தி கார்த்திக் கோபிநாத்தை முற்றிலும் போலியான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. இந்தச் செயல், திமுக அரசு …

Read More »

அடேங்கப்பா 18 மாவட்டங்களில் கனமழை: உங்க ஊரில் மழை எப்படி?

தமிழ்நாட்டில் இன்று பதினெட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜுன் 3ஆம் தேதி வரையான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று ( மே 30) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது …

Read More »

பள்ளப்பட்டி ஜல்லிக்கட்டில் வெற்றி வாகை சூடிய குடும்பத்தலைவியின் காளை – குவியும் பாராட்டு

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு வெகு விமர்சியாக நடைபெற்றது. போட்டியில் 350க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் வீரத்தமிழச்சி காளை வெற்றிபெற்று வாகை சூடியுள்ளது. வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் ஸ்ரீஅய்யனார்,ஸ்ரீஅரியசாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி இன்று வெகு விமர்சையாக …

Read More »