Breaking News
Home / 2022 / May / 09

Daily Archives: May 9, 2022

தாழையம்பட்டு துர்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தை அடுத்த தாழையம்பட்டு கிராமத்தில் துர்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்றதையொட்டி, கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில், யாகசாலை வழிபாடுகளுடன் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களான பிரசன்ன வெங்கடாஜலபதி, விநாயகர், பாலமுருகன், நவகிரகங்கள், புதிதாக அமைக்கப்பட்ட அனுக்கிரக பாபா கோயில் கோபுரங்கள் மீது, யாகசாலையில் அமைக்கப்பட்டிருந்த புனித கலசநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, மூலவர்களுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில், இந்து …

Read More »

கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வருகை: மலர் தூவி வரவேற்றார் அமைச்சர் நாசர்

சென்னை குடிநீருக்காக கடந்த 5-ம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்டுவரும் கிருஷ்ணா நதி நீர் 152 கிமீ தொலைவில் உள்ள தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் வந்தடைந்தது. அப்போது,விநாடிக்கு 172 கன அடி என வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீரை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மலர் தூவி வரவேற்றார். இந்நிகழ்வில், எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன் …

Read More »

இறைச்சி விற்கும் உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள்: உணவு பாதுகாப்புத் துறை முடிவு

 கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூரில், ஓர் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி தேவநந்தா உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட ஷவர்மாவில் ‘ஷிகெல்லா’ என்ற பாக்டீரியா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், தமிழகம் முழுவதும் ஷவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உணவுப் பாதுகாப்புத் …

Read More »

சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கு | கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நிறுத்தம்: முஸ்லிம்களின் மனு மீது இன்று விசாரணை

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்கார கவுரி அம்மனை அன்றாடம் தரிசிக்க உத்தரவிட கோரிமாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் நியமித்த குழு, கோயிலை ஒட்டியுள்ளகியான்வாபி மசூதிக்குள் கள ஆய்வு தொடங்கியது. குழுவின் ஆணையர் மூத்த வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் நடந்த கள ஆய்வில் அனைத்து தரப்பின் சார்பில் 36 பேர் பார்வையாளர்களாக இடம்பெற்றனர். சுமார் 4 மணி …

Read More »

தக்காளி விலை ரூ.45 ஆனது

கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக மொத்த விலையில் கிலோ ரூ.60 வரை விற்கப்பட்டு வந்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில் தக்காளி விலை கிலோ ரூ.45 ஆக குறைந்துள்ளது. மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.40, பாகற்காய், கத்தரிக்காய், கேரட் தலா ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.19, பீட்ரூட், நூக்கல் ரூ.18, புடலங்காய் தலா ரூ.15, முட்டைக்கோஸ், …

Read More »

தொழில்நுட்ப வல்லுநர்கள் முல்லை பெரியாறு அணையில் இன்று ஆய்வு

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பை, தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஆனால் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு வலியுறுத்திவருகிறது. ஆனால் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், முல்லை பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் …

Read More »

ஐரோப்பா தினம் ஏன் கொண்டாடப்படுகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

ஐரோப்பா தினம் – ஒவ்வொரு ஆண்டும் மே 9 அன்று கொண்டாடப்படுகிறது – ஐரோப்பிய ஒன்றிய கட்டிடம் திறக்கப்பட்ட நாளை நினைவுகூரும். வரலாற்றுப் போட்டியாளர்களான பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு இடையே “வெறுமனே நினைத்துப் பார்க்க முடியாதது,  ஆனால் பொருள் ரீதியாக சாத்தியமற்றது” என்று ஒரு போரை உருவாக்குவதற்காக, பிரெஞ்சு வெளியுறவு மந்திரி ராபர்ட் ஷுமானால் வரலாற்று ‘ஷூமன் பிரகடனம்’ முன்வைக்கப்பட்ட நாள். இந்த நாள் ஐரோப்பாவில் அமைதி மற்றும் ஒற்றுமையைக் …

Read More »

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன்..!

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ஸ்பெயின் நாட்டின் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார். 62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த …

Read More »

அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 77.18ஐ எட்டியது

டாலரின் வலிமை, அபாயகரமான சொத்துகளுக்கான தேவையை குறைந்தாலும், வெளிநாட்டினர் நாட்டின் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. திங்கள் அன்று டாலருக்கு எதிராக ரூபாய் 0.3% சரிந்து 77.1825 ஆக இருந்தது, இந்த மார்ச் மாதத்தில் முந்தைய சாதனையான 76.9812 ஐ கடந்தது. இந்த ஆண்டு இந்திய பங்குகளில் இருந்து 17.7 பில்லியன் டாலர்களை வெளிநாட்டு நிதிகள் இழுத்துள்ளன. அதிகரித்து வரும் …

Read More »

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் குறைந்தது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டு உள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 3 ஆயிரத்து 451 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 3 ஆயிரத்து 805-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே …

Read More »