Breaking News
Home / 2022 / May / 10

Daily Archives: May 10, 2022

தெலங்கானாவில் லாரி மீது வேன் மோதி 9 பேர் உயிரிழப்பு: பிரதமர் ரூ.2 லட்சம் நிதியுதவி

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டம், சில்லாரி கிராமத்தை சேர்ந்த சாதர்வல்லி மாணிக்கம் என்பவர் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். பத்தாவது நாள் சடங்கில் பங்கேற்க இதே மாவட்டத்தை சேர்ந்த எல்லாரெட்டி கிராமத்தினர் சுமார் 25 பேர் வேனில் ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்னர். அப்போது, வேன் வேகமாக சென்ற போது ஹுசைன் நகர் ரயில்வே கேட் பகுதியில் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி …

Read More »

ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் பாபு (38) ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த 5 மாதங்களாக அவர் ஆட்டோ ஓட்டவில்லை. இப்போது சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ராகேஷ் பாபு, கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது அறுவை சிகிச்சைக்காக மலப்புரத்தில் உள்ள இருபதுக்கும் அதிகமான பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் நிதி …

Read More »

காங்கிரஸ் புத்துயிர் பெற ஒத்துழைப்பு அவசியம்: செயற்குழு கூட்டத்தில் மூத்த தலைவர்களுக்கு சோனியா வேண்டுகோள்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி புத்துயிர்பெற மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சல் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் பேரவைத் தேர்தலும் 2024-ல் மக்களவை பொதுத் தேர்தலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், வரும் …

Read More »

தேசத் துரோக சட்ட விதிகள் மறு ஆய்வு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதுடெல்லி: தேசத் துரோக சட்ட விதிகளை மறு ஆய்வு செய்வோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தில் 124ஏ பிரிவு தேசத் துரோகத்தை வரையறுக்கிறது. நாட்டில் நடைமுறையில் உள்ள இந்திய குற்றவியல் சட்டம் 124ஏ-வானது நாட்டுக்கு தேசத் துரோகம் இழைத்தவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய வகை செய்கிறது. தேசத்துரோக சட்டப் பிரிவு 124ஏ-ன் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் …

Read More »

100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்: ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அதிகாரி வங்கிக் கணக்குகளில் ரூ.1.43 கோடி டெபாசிட் – அமலாக்கத்துறை தகவல்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.18 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 2008 முதல் 2011 வரையில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக, இளநிலை பொறியாளர் ராம் வினோத் பிரசாத் சின்ஹா மீது மாநில ஊழல் தடுப்புபிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இதன் அடிப்படையில், சின்ஹா மீது அமலாக்தத் துறையினர் 2012-ல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். …

Read More »

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலி: சுகோய்-30 போர் விமானங்களை மேம்படுத்தும் முடிவு தள்ளிவைப்பு

புதுடெல்லி: இந்திய விமானப் படையில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சுகோய்-30 ரக விமானங்களை ரஷ்யா தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது இந்திய விமானப் படையில் 272 சுகோய்-30 எம்கேஐ ரக விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களின் பாகங்கள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பெங்களூருவில் உள்ள பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) பொருத்தப்பட்டு விமானம் இயக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் …

Read More »

பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எப்

சண்டிகர்: இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தொடர்ந்து பல்வேறு வழிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆளில்லா விமானமான ட்ரோன்கள் மூலம், இந்திய எல்லைப் பகுதிக்குள் ஆயுதங்களை அனுப்பி தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்வது, ட்ரோன்களில் போதைப் பொருளை அனுப்புவது, இந்திய எல்லைப் பகுதிகளை உளவு பார்ப்பது போன்ற செயல்களை செய்து வருகிறது. ஆனால், எல்லை பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாகிஸ்தானில் இருந்து பறந்து வரும் …

Read More »

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 11, 12, 13-ம் தேதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் …

Read More »

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பழனிசாமி கோரிக்கை

சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு,சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதுடன், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. மதம், சாதிச் சண்டைகள், கட்டாயப் பஞ்சாயத்துஇல்லை. ஆளும் கட்சியின் தலையீடு அறவே கிடையாது. 2013-ல் காவல் துறைக்கு ஆன்லைனில் புகார் அளிக்கும்முறையை அறிமுகப்படுத்தினோம். ஆனால், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் …

Read More »

உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34 ஆகும். இதில் 2 இடங்கள் காலியாக இருந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் கூடியது. அந்த கூட்டத்தில் குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜம்ஷெட் பர்ஜோர் பர்திவாலாவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கொலிஜியம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு …

Read More »