Breaking News
Home / 2022 / May / 13

Daily Archives: May 13, 2022

செஞ்சி அருகே பாக்கம் – கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு திட்டம்

விழுப்புரம்: செஞ்சி அருகே பாக்கம் – கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாக்கம் -கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இக்காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட இக்காட்டில் சிறுத்தை, கரடி, அரியவகை சிலந்திகள், அழிந்து வரும் நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், …

Read More »

முதல் பார்வை | டான் – பொழுதுபோக்குடன் சில பாடங்கள் சொல்லும் முயற்சி

தந்தையின் விருப்பத்திற்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு, தனக்கான இலக்கை தேடி அலையும் ஒருவன் இறுதியில் என்ன ஆனான் என்பது தான் படத்தின் ஒன்லைன் கதை . படிப்பு தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பதை தீர்க்கமாக நம்பும் தந்தைக்கு, படிப்பைத் தவிர வேறு எதையாவது இலக்காக கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என தேடி அலையும் மகனாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். வேறு வழியில்லாமல் தந்தை சேர்த்துவிட்ட ஒரே காரணத்துக்காக …

Read More »

கோவை தனியார் மருத்துவமனைகளில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் 10 குழந்தைகள் அனுமதி: பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சம்

கோவை: கோவை நகரில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளில் 10 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளுக்கு தொண்டையில் கடுமையான வலி ஏற்படும். உணவு அருந்தும்போது வலி ஏற்பட்டு, விழுங்க சிரமம் ஏற்படும். சருமத்திலும், தாடையிலும் தக்காளி நிறத்தில் சிறு சிறு திட்டுகள் வரும். இதுதான் இந்த தொற்றுக்கான அறிகுறியாகும். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு …

Read More »

இலங்கைக்கு வழங்க 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல்: அரசாணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: இலங்கைக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்வது குறித்த அரசாணைக்குதடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்பட உள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று கூறியும்திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையை …

Read More »

குஜராத் நிதியுதவி திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி – மாணவியின் விருப்பத்தை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்

புதுடெல்லி: குஜராத்தில் நேற்று நடந்த அரசு திட்ட பயனாளிகளிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில், மாணவி ஒருவரின் விருப்பத்தைக் கேட்டு, பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு ஒரு சில நிமிடங்கள் மவுனமானார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தில், பரூச் நகரில் விதவைகள், முதியோர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்கான மாநில அரசின் 4 முக்கிய நிதியுதவி திட்டங்கள் மாவட்ட நிர்வாகத்தால் 100 சதவீதம் நிறைவு செயயப்பட்டுள்ளன. இதை கொண்டாடும் வகையில் நேற்று நடத்தப்பட்ட முன்னேற்ற பெருவிழா …

Read More »

கூகுளில் சம்ஸ்கிருதம் மொழிபெயர்ப்பு வசதி

புதுடெல்லி: கூகுள் இணையதள நிறுவனம் மொழிபெயர்ப்பு சேவையை அளித்து வருகிறது. கூகுள் இணையதளத்தில் ஏற்கெனவே மொழிபெயர்ப்பு வசதியில் தமிழ், இந்தி, பெங்காலி, பிரெஞ்சு உட்பட உலகின் 133 மொழிகள் உள்ளன. பயனாளிகள் ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ எனப்படும் மொழிபெயர்ப்பு வசதி மூலம் தங்களுக்கு தேவையான மொழிகளை அதில் குறிப்பிட்டுள்ள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது மொழிபெயர்ப்பு வசதியில் சம்ஸ்கிருதம் உட்பட 24 புதிய மொழிகள் …

Read More »

கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படும் தமிழ்ப் படம் ராக்கெட்ரி

சர்வேதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் தமிழ்ப் படமான ராக்கெட்ரி திரையிடப்பட உள்ளது. அந்த விழாவில் திரையிடப்படவுள்ள இந்தியப் படங்களின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படடும் இந்திய திரைப்படங்களில் ஆர்.மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி என்னும் திரைப்படமும் ஒன்றாகும். இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள ராக்கெட்ரி- தி நம்பி …

Read More »

இந்திய ராணுவத்துக்கு மேலும் 12 சுவாதி ரேடார்கள் – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தயாரிப்பு

புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்கு மேலும் 12 சுவாதி ரேடார்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவம், அமெரிக்காவின் அதிநவீன ரேடார்களை பயன்படுத்தியது. இந்திய ராணுவம், பிரிட்டிஷ் தயாரிப்பு ரேடார்கள் உதவியுடன் போரை நடத்தியது. ஆனால் எதிரியின் ஆயுதங்கள் எந்த இடத்தில் உள்ளன என்பதை கண்டறிவதில் இந்திய ராணுவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு எதிரிகளின் ஆயுதங்களை கண்டறியும் அதிநவீன ரேடாரை …

Read More »

தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதை சட்ட உரிமையாக கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை: தண்டனைக் கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதை சட்ட ரீதியாகவோ அல்லது அடிப்படை உரிமையாகவோ கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். 2001-ல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ள தனது மகன் ஹரிஹரனை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவரதுதாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: முன்னாள் முதல்வர் …

Read More »

வெளிநாடு செல்பவர்களுக்காக பூஸ்டர் டோஸ் போடுவதற்கு 9 மாத இடைவெளி குறைப்பு – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: வெளிநாடு செல்பவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு பூஸ்டர் டோஸ் போடுவதற்கான 9 மாத கால இடைவெளியை மத்திய அரசு குறைத்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பரவலை தடுக்க 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், 2-வது டோஸ் போட்டுக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் போடுவதற்கு 9 …

Read More »