Breaking News
Home / 2022 / May / 14

Daily Archives: May 14, 2022

ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 21 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசு – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட 21 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகள், பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்தி: ஆதிதிராவிடர், பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான தனி பணிக்குழு நிதியான ரூ.50 லட்சத்தில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையை கொண்டு ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களின் சிறந்த 10 …

Read More »

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மே 20 வரை பள்ளிக்கு வரவேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மே 20-ம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் நடப்பு கல்வி ஆண்டு (2021-22) 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு மே 5-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து, மாணவர்களுக்கு இன்று (மே 14) முதல் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் …

Read More »

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: காமராஜர் பிறந்தநாளில் தொடங்க பரிசீலனை

சென்னை: மேற்படிப்புக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி அமல்படுத்தலாமா என தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மேற்படிப்புக்கு செல்லும் அரசு பள்ளி …

Read More »

வீட்டில் அலுவலக பணி சூழல் மாற்றம் – அலுவலகம் வர சொன்னதால் 800 ஊழியர்கள் ராஜினாமா

பெங்களூரு: வீட்டில் இருந்து அலுவலக பணிபுரியும் சூழல் மாறி, அலுவலகம் வந்து பணிபுரிய சொன்னதால் 800 ஊழியர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் கோடிங் கற்றுத்தரும் வொயிட் ஹாட் ஜூனியர் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் 800 நிரந்தர பணியாளர்களும் கடந்த 2 மாதங்களில் தங்களது வேலையை ராஜினாமாசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வொயிட் ஹாட் ஜூனியர் நிறுவனத்தை பைஜூஸ் நிறுவனம் 2020 ஆண்டு கையகப்படுத்தியது. இந்நிறுவனத்தை 30 கோடி …

Read More »

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா காலமானார்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக தலைநகராக அபுதாபி செயல்படுகிறது. உலகில் எண்ணெய் வளமிக்க நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் 6-வது இடத்தில் உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்த நாட்டின் அதிபராக ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யான் (73) பதவி வகித்து வந்தார். பல்வேறு நெருக்கடியான நேரத்தில் நாட்டை திறம்பட வழிநடத்தினார். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் நட்பு பாராட்டினார். கடந்த 2020-ம் ஆண்டு …

Read More »

மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணம் உயர்வு குறித்து முதல்வர் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சேலம்: ‘சூழ்நிலைக்கேற்ப சிலவற்றின் கட்டணங்களை உயர்த்த வேண்டி உள்ளது. மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்’ என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார். சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது. இதில் ஆத்தூரில் மே 18-ல் நடைபெறும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில், முதல்வர் …

Read More »

உக்ரைனில் செமஸ்டர் கட்டணம் செலுத்தாததால் மருத்துவப் பல்கலை.யில் இருந்து 104 இந்திய மாணவர்கள் நீக்கம்

புதுடெல்லி: செமஸ்டர் கட்டணம் செலுத்தாததால், உக்ரைனின் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து, தமிழக மாணவர்கள்உள்ளிட்ட 104 இந்திய மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால், அங்குள்ள தேசிய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் அதிகமாக சிக்கிய இந்தியரை மீட்க, பிரதமர் நரேந்திர மோடியின் ’ஆப்ரேஷன் கங்கா’ மூலம் சிறப்பு …

Read More »

ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய சர்ச் வழங்கிய திருமண சான்றை ஆதாரமாக ஏற்க முடியாதது ஏன்?: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

மும்பை: திருமணத்துக்குப் பிறகு பெண்களின் பெயரில் மாற்றம் ஏற்படுகிறது. சில பெண்கள், கணவரின் பெயரை தங்கள் பெயரோடு இணைத்து கொள்கின்றனர். சிலர் தங்களது முதல் எழுத்தை மாற்றிக் கொள்கின்றனர். இதற்கேற்ப ஆதார், பான் எண், வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் பெண்கள் தங்களது பெயர்களில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் எழுகிறது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பெண் மரிசா அல்மைதாவுக்கு (27) கடந்த ஆண்டு டிசம்பரில் …

Read More »

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் சீருடை விநியோகம்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடைகள் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான விநியோகப் பணிகள் ஆண்டுதோறும் கல்வி மாவட்ட …

Read More »

நாட்டின் அமைதியை பாஜக சீர்குலைக்கிறது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

உதய்பூர்: ‘‘நாட்டின் அமைதியை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சீர்குலைக்கின்றன என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸின் 3 நாள் ‘‘சிந்தனை கூட்டம்’’ நேற்று தொடங்கியது. கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி உட்பட சுமார் 400 மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சியால் நாம் பலன் அடைந்துள்ளோம். …

Read More »