விராட்கோலி- ரோகித் சர்மா லடாய் உச்சம்?
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப்பின் இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அணியில் எடுக்கப்பட்ட சில முடிவுகளில் ரோஹித் சர்மாவுக்கு உடன்பாடு இல்லை என தகவல்கள் கசிந்தது. இதனால் அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதில் ரோஹித் சர்மாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்டது. இதனால் ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என முதலில் முடிவு செய்யப்பட்டது. இந் நிலையில், திடீரென தன் ஓய்வை ரத்து செய்து விட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதாக சொன்னார் கோலி. இதனால் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு அவரே கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதனால் ரோஹித் சர்மா கேப்டனாகும் வாய்ப்பை கோலி தடுத்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்தது.
இந் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் கோலியை பின்தொடர்வதை ரோகித் சர்மா நிறுத்தியிருக்கிறார். ஆனால் கோலி, ரோகித்தை பின்தொடர்கிறார். ரோகித் மனைவி ரித்திகாவை தொடர்வதை நிறுத்தி விட்டார். இதற்கிடையே கோலியின் மனைவி அனுஷ்கா போலிகள் தோன்றினால் உண்மை மவுனமாகத்தான் இருக்கும் என்று பதிவிட்டது பரபரப்பை கூட்டியுள்ளது.