கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட சூளகிரி எல்லை முடிவில் உள்ள பாலகொண்டராயதுர்கம் என்னும் கிராமத்திற்கு உட்பட்ட, ஸ்ரீ பாலகொண்டராமாயண சுவாமி திருக்கோவில் அடர்ந்த வனப் பகுதியின் நடுவே சுமார் 1500 அடிக்கும் மேல் அமைந்துள்ளது வருடாவருடம் இக்கோவிலில் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக அந்த கிராமத்தில் உள்ள மக்கள் கொண்டாடுகிறார்கள் அது மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் வாராவாரம் சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன இக்கோயிலின் மலைமேல் மலை உச்சியில் நின்று பார்த்தால் கண்ணெட்டும் தூரம் வரைக்கும் அருமையான விவசாய நிலங்களும் கிருஷ்ணகிரி வரை தெரியும் இரவினில் பார்த்தாள் கிருஷ்ணகிரி மாவட்டம் திருவிழா போல ஜொலிக்கும் மின்சார விளக்குகள் மிக அருமையான காட்சி இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலை அவ்வளவு பிரமாதமாக இருக்கும் ஓசூர் வரையும் கண் கொள்ளா காட்சி ஸ்ரீ பால கொண்டவராயன சுவாமியை தரிசித்து பக்தியோடு இருந்தால் நினைத்தது அனைத்துமே நிறைவேறும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு மலை ஏறுவதற்கு மிகவும் சிரமத்தில் இருந்தது தற்போது பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு ஒவ்வொருவரும் மலை அடிவாரத்தில் இருந்து உச்சிவரை வேண்டுதல் நிறைவேற்ற பட்டவர்கள் படிக்கட்டுகளை அமைத்து பக்தர்களுக்கு சிறப்பு வழியையும் செய்துள்ளார்கள்,
செய்தி குமார் நரசிம்மா பாலகொண்டாராயன துர்கம்.