பேரூராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் உண்டா…?இல்லையா…?ஊக்கத் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு பணி புரிகிறார்களா…?
அயோத்தியாப்பட்டனத்திற்கு உட்பட்ட காரிப்பட்டியில்
பேரூராட்சியில் பணிபுரியும் ஆட்கள் மொத்தம் 19 பேர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் அவற்றில்
துப்புரவு பணியாளர்கள்
5 நபர்கள் அவர்களுக்கு மாதம்
ரூபாய்/-5400 வழங்கப்பட்டு வருகிறார்கள்.
வறுமை ஒழிப்பு சங்கத்தில் (VPRC) 10 நபர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு
ரூபாய்82.80-/
(வாட்டர் மேன்) எனப்படும் தண்ணீர் திறந்து விடுபவர் 4 பேர் பணிபுரிகிறார்கள் ஒரு மாதத்திற்கு
ரூபாய்4680-/
இவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் சம்பளம் வழங்கிக் கொண்டுதான் வருகிறது. இவர்களது பணிகளை ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை…!!
எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மா.அருள் நேரு ஜோனல் செய்தியாளர்
சேலம்