திருச்சியில் இயங்கும் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்காக போராடி நிவாரணம் பெற்றுதந்தும் நுகர்வோர் சார்ந்த அனைத்து அரசு துறைகளில் நடக்கும் நுகர்வோர் கூட்டங்களில் நுகர்வோரின் பிரதிநிதியாக மக்கள் குறைகளை எடுத்துரைத்து குறைதீர்க்கும் பணியினை தொடர்ந்து செய்துவரும் நமது இயக்கம் கல்வி சேவையை செய்துவரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் மாஸ் எஜிகேசன் புரமோட்டர்ஸ் இந் நிறுவனம் மூலம் பள்ளி மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்க்கு வழிகாட்டியாகவும் இயங்கி அவர்களுக்கு எந்த வித சேவை கட்டணமும் இல்லாமல் கல்லூரி சேர்க்கை பணியை செய்துவருகின்றோம். மாணவர்களின் கல்வி தரம் உயரவேண்டும் அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி கிடைக்கவேண்டும் என்பதே இந் நிறுவனத்தின் தலையாய கடமையாக செயல்பட்டு வருகின்றது. என்று இந் நிறுவனத்தின் தலைவர் பெருமிதமாகக் கூறினார்.
