Breaking News
Home / தகவல்கள் / திருப்பூரில் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் சார்பில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களின் முதல் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கருடன் மாத இதழின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான திரு. என்.ரமேஷ் அவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துனை தலைவரும் வல்லூறு இதழின் ஆசிரியர் திரு.முனைவர் எஸ்.என்.மோகன்ராம் .சங்கத்தின் மாநில துணை செய்தி தொடர்பாளருமான A.R.சக்திவேல் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு அவரவர் கருத்துக்களை முன் வைத்தனர். இதில் குறிப்பாக திருப்பூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் அவர்கள் பெரிய நிறுவனம் சார்ந்த பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதையுடன் அணுகுவதாகவும் சிறிய பத்திரிகையாளர்களை அவமதிப்பு செய்வதாககவும் அனைவரும் இதே குற்றச்சாட்டை முன் வைத்தார்கள். மேற்படி இந்த குற்றச்சாட்டினை களையும் விதமாக மாநில துணை தலைவர் அவர்கள் தீர்வு காண்பதாக தெரிவித்துக்கொண்டார்.

About Admin

Check Also

இணைவீர் ரியல் எஸடேட் வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம்

Leave a Reply

Your email address will not be published.