கொரேனா விழிப்புணர்வு கலைப்பயணம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், கிராம உதயம், உதவும் உள்ளங்கள் நெல்லை கேன்சர் கேர் சென்டர் சார்பில் கொரானா விழிப்புணர்வு பிரச்சார கலைபயணம் நடைபெற்றது. திருநெல்வேலி டவுன் மற்றும் நெல்லை சந்திப்பு பகுதியில் கொரானா விழிப்புணர்வு பணி நடைபெற்றது இந்த பணிகளை திருநெல்வேலி கோட்டாட்சியர் மூர்த்தி கலைப் Uயணத்தை தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.,துணை ஆட்சியர் பயிற்சி மகாலட்சுமி திருநெல்வேலி தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் கிராம உதய நிர்வாக இயக்குனர் டாக்டர் பகத்சிங் புகழேந்தி கொரானா விழிப்புணர்வு மாவட்ட குழு உறுப்பினர் முனைவர் கோ கணபதி சுப்ரமணியன், டவுண் வருவாய் ஆய்வாளர்.மாரிதுரை, நெல்லை கேன்சர் சென்டர் முருகன் சுகாதார அலுவலர் வனிதா, கிராம உதயம் பாலா, ஆகியோர் கலந்து கொண்டார்கள். கோடாங்கி கலை குழு பொறுப்பாளர் உமாராணி தலைமையில் பொய்க்கால் குதிரை மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பணி நடைபெற்றது. அனைவருக்கும் கபசுர குடிநீர் , முக கவசங்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நெல்லை ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்வு,நடைபெற்றது.இதில் ரயில் நிலைய முதுநிலை மேலாளர் திரு.முருகேஷ் கலந்து கொண்டு உரையாற்றினார். முக கவசம், கப சுர குடிநீர் வழங்கினார்
