தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
*தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் – ஏமாற்றமும்*
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக அரசின் டிஜிட்டல் – பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு 27 மாதங்களுக்கு பஞ்சப்படி கிடையாது என்ற அறிவிப்பை திரும்பபெற வலியுறுத்தியும்
1000 அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள்
16.08.2021 அன்று திருச்சியில் திங்கட்கிழமை
நேரம்: காலை 9.00 மணி, உணவு இடைவேளை மற்றும் மாலை 5.50 மணி போராட்டம் நடைபெற்றது
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான
* புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாததையும்,
* கோரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்காததையும், * தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு,
அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள்,
MRB செவிலியர்கள் உள்ளிட்ட
ஊழியர்களுக்கு காலமுறை ஊதியத்திற்கு மாற்றாததையும்,
*4.5 இலட்சம் காலிபணியிடங்களை நிரப்புவதற்கு ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லாததையும்,
* சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக்காலத்தை பணிக்காலமாக
வரன்முறைப்படுத்தாததையும்
கண்டித்து தமிழ்நாடு அரச ஊழியர் சங்கத்தின் சார்பில் 16.08.2021 திங்கட் கிழமையன்று அரசு அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற மாநில மைய முடிவிற்கிணங்க திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து வட்டக்கிளைகள் | மற்றும் திருச்சி மாநகர பகுதியில் முக்கிய அலுவலகங்கள் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து துறை அரசு ஊழியர்கள் முழுமையாக பங்கேற்று கோரிக்கைகளை வெற்றி பெறச்செய்திடுமாறு போராட்டங்களை மேற்கொண்டனர்.
தோழமையுடன்
மாவட்ட நிர்வாகிகள் /வட்டக்கிளை நிர்வாகிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டம்