கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஹெல்ப் 2 ஹெல்ப் என்ற இரத்ததான குழு அரசு மருத்துவமனையில் இருக்கும் ஏழை எளியோருக்கு இரத்ததானம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது.
தாந்தோன்றிமலை – D கூடலூர் செல்லும் நகரப் பேருந்தில் நமது ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பை பற்றிய பெரிய போஸ்டரை பஸ்ஸின் பின்புறமும் உட்புறமும் ஒட்டிவிழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் வெள்ளியங்கிரி பஸ் உரிமையாளர் கிரி அவர்கள்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்யும் பேருந்தில் இவ்விதம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது பலரையும் சென்றடைந்து இரத்த தானம் கொடுக்கவும் பெறவும் வழிவகை செய்யும் என்று சமூக ஆர்வலர்கள் வெள்ளிங்கிரி பஸ் உரிமையாளர் கிரி அவர்களைப் பாராட்டினர்.
ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்கள் கிரி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.