Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை- சாலிகிராமத்தில் நடைபெற்றது…

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை- சாலிகிராமத்தில் நடைபெற்றது…

செய்தித்துறையினர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்.

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை- சாலிகிராமத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை ஏற்றார், செயலாளர் ராஜ பாரதி முன்னிலை வகித்தார், ஒருங்கிணைப்பாளர் மோகன் வரவேற்றார், கௌரவத் தலைவர் விஜயகுமார் மற்றும் ஆலோசகர் சிங்க தமிழச்சி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் பத்திரிகையாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சங்கத்தின் ஒவ்வொரு நிர்வாகிகளும் சில ஆலோசனைகள் கருத்துக்கள் தெரிவித்துள்ளார்கள் பிறகு பத்திரிகையாளர்களின் நலன் கருதி சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

அதாவது 1. பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்கள பணியாளராக அறிவித்தும் பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்ததற்கு நன்றி தெரிவித்தும்,

  1. பத்திரிகையாளர் நலனை கருதி தொடர்ந்து வெளிவரும் சிறு குறு பத்திரிகைக்கும் அரசு விளம்பரம் கொடுக்க வேண்டும், அரசு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வீட்டுவசதி வாரியத்தில் அல்லது குடிசை மாற்று வாரியம் வீடுகள் வழங்க வேண்டும், தினசரி பத்திரிகை போலவே பருவ இதழ்களுக்கும் சம உரிமை சமசலுகை அளிக்க வேண்டும், கிராமங்களில் இருக்கும் தாலுகா, ஏரியா செய்தியாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,
  2. சமூக விரோதிகள், அரசியல்வாதிகளின் தூண்டுதல், மற்றும் குண்டர்களால் ஆங்காங்கே பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள் அதிலிருந்து காப்பாற்ற பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்,
  3. மூத்த பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பித்தால் பெரும்பாலோனோர் ஓய்வு ஊதியம் பெற முடியவில்லை, ஏனென்றால் கடுமையான விதிமுறைகள் இருக்கிறது ஆகையால் அரசு உடனடியாக விதிமுறைகளை தளர்த்த வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
  4. பத்திரிகையாளர்களுக்கு ஏதேனும் எதிர்பாராத காரணமாக இறப்பு ஏற்பட்டால் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அந்த குடும்பத்திற்கு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.
  5. அரசு அங்கீகார அட்டை பெறாத, RNI பதிவு பெற்று வெளிவரும் நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் சிற்றிதழ்கள் ஆகியவற்றில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் முதல்.. அலுவலகத்தில் பணியாற்றுபவர் மற்றும் தாலுகா, பகுதி செய்தியாளர்கள் வரை பாரபட்சமின்றி அனைவரையும் நலவாரியத்தில் பயன்படும் வகையில் விதிமுறைகள் கொண்டு வரவேண்டும்.
    என பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்ற மாநில நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் நியமன கடிதம் வழங்கப்பட்டன, இக்கூட்டத்திற்கு துணைத் தலைவர் திருச்சி மோகன்ராம், சேலம் பாண்டித்துரை, இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், துணை ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் ரமேஷ், அமைப்பு செயலாளர் தென்காசி முத்துராஜ், துணைச் செயலாளர் லோகேஷ்குமார், மகளிர் அணிச் செயலாளர் பிரியா கிருஷ்ணன், துணைச் செயலாளர் காஞ்சிபுரம் ஜெய்சங்கர், செங்கல்பட்டு நிர்வாகி இளவரசன், சென்னை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள், இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் சின்னத்திரை பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் இறுதியாக சங்க பொருளாளர் முத்தையா நன்றி கூறினார்.

About Admin

Check Also

“வெளுக்கும்” தாமரை.. திமுகவுக்கு மாற்று பாஜகவா?.. கமலாலயத்துக்கு மெசேஜ் தந்த “திராவிடம்”

சென்னை: எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.. அத்துடன் நெத்தியடி …

Leave a Reply

Your email address will not be published.