
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி பெற்றது .இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் குஜராத் 8 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
2 வது இடத்தில் 7 வெற்றிகளுடன் லக்னோ அணியும் ,3 வது இடத்தில் 6 வெற்றியுடன் ராஜஸ்தான் அணியும் ,4 வது இடத்தில் 6 வெற்றியுடன் பெங்களூரு அணியும் உள்ளன .