Breaking News
Home / செய்திகள் / மே 16-ல் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

மே 16-ல் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்கின்றனர். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.மதிவாணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மே 16-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று விழா பேருரை ஆற்றுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றுகிறார். பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

courtesy: hindutamil

About Admin

Check Also

விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்…

எந்தவொரு தமிழ்ப் படமும் விக்ரம் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, படத்தின் புரொமோஷன் டாப் லெவலில் உள்ளது. விக்ரம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *