Breaking News
Home / செய்திகள் / தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப்-2 தேர்வு 4,012 இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை, குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள 5 ஆயிரத்து 529 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. அதன்படி, இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பே ர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 / 2ஏ தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடக்கிறது. 200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு, 300மதிப்பெண்ணுக்கு தேர்வு கணக்கிடப்படும். தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெறுகிறது. தமிழக முழுவதும் 323 பறக்கும்படை, 6,400 ஆய்வு குழு, 4,012 வீடியோ குழு அமைத்து தீவிர கண்காணிப்போடு தேர்வு நடைபெறுகிறது. 12.30 மணிக்கு தேர்வு முடிந்தாலும், 12.45 மணிக்கு பிறகே தேர்வர்கள் வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது முன்னதாக இந்த தேர்வுக்கு தேர்வர்கள் காலை 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் வரவும், அதற்கு மேல் வருபவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தி இருந்தது. மேலும், ஹால்டிக்கெட் மற்றும் அடையாள அட்டையையும் தேர்வர்கள் கையில் கண்டிப்பாக எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

THANKS TO : DAILY THANTHI

About Admin

Check Also

விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்…

எந்தவொரு தமிழ்ப் படமும் விக்ரம் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, படத்தின் புரொமோஷன் டாப் லெவலில் உள்ளது. விக்ரம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *