
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக பதிவாகியுள்ளது. ஒரே நாளில் 25 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 34 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24, 348 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,346 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25.லட்சத்து 94 ஆயிரத்து 801 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 14,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,32,388 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை 192. 12 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக அதிகரித்திருகிறது. அதேநேரம் உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது சற்று நிம்மதியடையச் செய்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது,
THANKS TO : TOP TAMIL NEWS