
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும் வேளாண்துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் வடலூர் தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சரும் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘ஆட்சிக்கு வந்தபின் திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றது. ஆனால் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இதுவரை கொடுக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் மக்கள் இடத்திலேயே பெரும் பேச்சாக இருந்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம் விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் தொடங்கப்படும். விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
ஏழை, எளிய மக்களுக்கான முதல்வராக செயல்பட்டவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய பிறந்தநாள் வருகின்ற 3-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதனை நாமும் கொண்டாட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்திலும், நகரப் பகுதியிலும், பேரூராட்சி ஆகிய வார்டுகளில் வீதி வீதியாக கருணாநிதியின் படத்தை திறந்து வைத்து மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் என பேசிய அவர்
பின்னர் திமுக நிர்வாகிகளுக்கு ஷாக் என்று கொடுத்தார்.
THANKS TO : NEWS 18 TAMIL