Breaking News
Home / செய்திகள் / விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்…

விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்…

எந்தவொரு தமிழ்ப் படமும் விக்ரம் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, படத்தின் புரொமோஷன் டாப் லெவலில் உள்ளது.

விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கமல் நடித்துள்ள விக்ரம் படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது.

கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என ரசிகர்கள் மனம் கவர்ந்த ஹீரோக்கள் ஒரே படத்தில் இடம்பெற்றுள்ளனர். மேலும், மாநகரம், கைதி, மாஸ்டர் வெற்றிப் படங்களை அளித்த லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியுள்ளதால், எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று இறுதியாக சவுண்ட் மிக்ஸிங் நடைபெற்று வந்தது. தற்போது அதுவும் முழுமை பெற்று விட்டதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இனி தியேட்டரில் விக்ரம் இறங்க வேண்டியதுதான் மிச்சம் உள்ளது. இந்நிலையில், விக்ரம் படத்தில் கமலின் நேம் கார்டு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.

அதனை வெளியிட்டுள்ள லோகேஷ், அனிருத்துடன் கைகோர்த்து ஃபோட்டோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 1986-ல் வெளிவந்த விக்ரம் படத்தின் கமலுடைய நேம் கார்டை சற்று அப்டேட் செய்துள்ளனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் என கமலின் நேம் கார்டு இடம்பெற்றுள்ளது. நாளை மற்றொரு நிகழ்வாக விக்ரம் படத்தின் ட்ரெய்லரை உலகின் உயரமான திரையான புர்ஜ் கலிஃபாவில் திரையிட உள்ளனர்.

எந்தவொரு தமிழ்ப் படமும் விக்ரம் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, படத்தின் புரொமோஷன் டாப் லெவலில் உள்ளது.

ரயில் முதல் தண்ணீர் பாட்டில் வரை திரும்பும் இடமெல்லாம் விக்ரம் நிறைந்திருக்கிறார். விளம்பரத்தின் அளவுக்கு படம் ரசிகர்களை திருப்திபடுத்துமா என்பது இன்னும் 2 நாட்களில் தெரிந்து விடும்.

THANKS TO : NEWS 18 TAMIL

About Admin

Check Also

“வெளுக்கும்” தாமரை.. திமுகவுக்கு மாற்று பாஜகவா?.. கமலாலயத்துக்கு மெசேஜ் தந்த “திராவிடம்”

சென்னை: எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.. அத்துடன் நெத்தியடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *