பாரீஸ் :பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.
நடப்பாண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் தொடரும், களிமண் தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட் ஸ்லாம் தொடருமான பிரெஞ்ச் ஓபன் போட்டி கடந்த ஆண்டு தொடங்கியது.
இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சும், 13 முறை சாம்பியனான நடாலும் மோதினர்.
பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நடால் 110 வெற்றியும், மூன்றே தோல்வியை மட்டுமே பெற்றுள்ளார். இதில் கடந்த ஆண்டு அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார். மேலும் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஜோகோவிச்சை நடால் கடுமையாக சாடினார். இதனால் இருவரும் மோதிய இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே நடால் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். பல முறை ஜோகோவிச்சின் சர்வீஸ்களை உடைத்த நடால், ஜோகோவிச்சுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தினார். இதனால் முதல் செட்டை 6க்கு2 என்ற நடால் கைப்பற்ற, திமிரி எழுந்த ஜோகோவிச், பதிலுக்கு தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 4க்கு6 என்ற கணக்கில் வென்றார்.
இதனையடுத்து, பரபரப்பான மூன்றாவது செட் தொடங்கியது. இதில் ஜோகோவிச் சற்று தடுமாறினார். அடித்த பந்து அனைத்தையும் லாவகமாக எதிர்கொண்டார் நடால், இதனால் ஜோகோவிச் பல தவறுகளை இழைக்க நேரிட்டது. இந்த செட்டையும் நடால் 6க்கு2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதனால் ஆட்டத்தை தீர்மானிக்கும் 4வது செட் நடைபெற்றது. இதை நடால் கைப்பற்றினால் வென்றுவிடுவார் என்பதால் ஜோகோவிச் கடுமையாக போராடினார்.

THANKS TO : MYKHEL TAMIL