ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் அடுத்த சேவையாக இரத்ததான குழுவை தொடர்ந்து ஆடை தானக் குழு இன்று தொடங்கப்பட்டது.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாககரூர் மாநகராட்சி முதல் பெண் மேயர் திருமதி.கவிதா கணேசன் அவர்களும் கரூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குழுவினைத் தொடங்கி வைத்துவாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் அறிமுக உரையாற்றினார்.
ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரி , பாலமுருகன் ஸ்காட் தங்கவேல்,
சாய் தங்கவேல்,
ஆசை கனகராஜ், பரமேஸ்வரன், ஆனந்த் செஸ் அகடமி சிவகுமார்
விழா நிகழ்ச்சிகளைச் சிறப்பாக அமைத்து இருந்தனர்.
பழைய பயன்படத்தக்க ஆடைகளை சேகரித்து ஏழை எளியவர்களுக்கு மாதம் ஒருமுறை அவர்கள் வாழும் இடம் தேடி நாடிச் சென்று வழங்கும் திட்டமே ஆடை தானத் திட்டம்.
இரத்ததான திட்டத்தின் மூலம் இதுவரை 1600 க்கும் மேற்பட்டவர்களுக்கு இரத்தம் தானம் வழங்கிய
Help 2 Help
அமைப்பின் புதிய ஆடைதானத் திட்டத்தை மாநகராட்சி பொறியாளர் ரவி உள்ளிட்ட பெற்றோர்கள் அனைவரும் பாராட்டினர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஆனந்த் செஸ் அகடமி நடத்தியிருந்த
செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மேயர் அவர்களும் ஆணையாளர் அவர்களும் வெற்றிக் கோப்பைகள் வழங்கியும் பதக்கங்கள் அணிவித்தும் பாராட்டினார்கள்.
Help 2 Help பணிகள் சிறக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.
சிவராமன்,
முதன்மை ஒருங்கிணைப்பாளர்.
Help 2 Help.