கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அம்மாபட்டி ஊராட்சியில் இன்று காலை 10 மணியளவில் கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பொது மக்களுக்குக் காண இலவச சட்ட ஆலோசனை விழிப்புணர்வு பயிற்சி முகாமானது தேசிய கீதத்துடன் தொடங்கி நடைபெற்றது. இம்முகாமில் கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக திரு, ஜே. எம். மனோஜ்பாண்டியன் வழக்குரைஞர் அவர்கள் கலந்து கொண்டு நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டதினை பற்றியும், பொது மகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், குழந்தை திருமணம், கொத்தடிமை முறை மற்றும் பலவிதமான சட்டகள், அதனை சரி செய்ய யாரை நாட வேண்டும், மேலும் பொது மக்களின் நிலுவையில் உள்ள வழக்குகள், சட்ட ஆலோசனைகள், பயிற்சிகள் பற்றி மிகவும் விளக்கமாக எடுத்து கூறினார். பொது மக்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த விதமான பிரச்சனையாக இருந்தாலும் தாங்கள் கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவை நாடி உதவி பெறலாம் என பொது மக்களுக்கு மிகவும் விளக்கமாக எடுத்து கூறினார். இந்த பயிற்சி முகாமில் ஊராட்சி செயலர் திரு, s. கோபிநாத்அவர்கள் வரவேற்பு வழங்கினார், திருமதி, R. தனம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார், திரு, ஈச நத்தம் எம். மாரியப்பன் plv அவர்கள் முன்னிலையில் வகித்தார், திரு. இரா. பாலமுருகன் plv அவர்கள் நன்றியுரை கூறி இவ்விழாவானது நாட்டு பண்ணுடன் முடிவுற்றது. இவ்விழா ஏற்பாட்டினை திரு, ஈசநத்தம் மாரியப்பன் plv அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகதினர் செய்து இருந்தனர். நன்றி.
