
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டியில் “கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட்” என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பகுதியை சேர்ந்த கணவனை இழந்தவர்கள், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் 50 க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கடந்த ஒரு வருடமாக “தினமும் மதிய உணவு” வழங்கி வருகிறார் டிரஸ்ட் நிறுவனத்தலைவராக உள்ள “அங்குலட்சுமி”.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தனக்கென ஒரு சுயதொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக குறைந்த கட்டணத்தில் தையல் பயிற்சி, டைப்ரைட்டிங் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார்.
இவரின் தன்னலமற்ற பொது சேவையை பொதுமக்கள் மற்றும் சமூக சேவகர்கள் பாராட்டி வருகின்றனர்.