
ஏழை எளியோர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார்
மதுரை, நவம்பர்.12-
மதுரை பெத்தானியாபுரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஏழை எளிய முதியோர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டிகள், சேலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழக தலைவரும், அகில இந்திய சிலம்பாட்ட கழக முன்னாள் பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவிற்கு வருகை தந்தவர்களை மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் பொருளாளர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.