
மதுரையில் சாஜர் அறக்கட்டளை ஜே.கே ஃபென்னர் நிதி நிறுவனத்துடன் இணைந்து பெருங்குடி, திருநகர், மற்றும் சமயநல்லூர் ஆகிய கிராமங்களில் தலா 25 பெண்களை ஒருங்கிணைத்து (75 பெண்களுக்கு) சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் ஒரு மாத கால பயிற்சி வகுப்புகளை நடத்தியது.
இந்த பயிற்சியில் பங்கேற்ற பெண்களிலிருந்து 17 நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு மதுரை லெட்சுமி சுந்தரம் ஹாலில் தினமலர் மற்றும் ஆசிர்வாத் நிறுவனம் இணைந்து நடத்திய மில்லட் மகாராணி 2024 ல் கலந்து கொண்டனர்.

இதில் சமயநல்லூர் கிராமத்தை சேர்ந்த மாலதி முதலாவது பரிசான பிரிட்ஜ், மூன்றாவது பரிசான மிக்ஸியை திருமதி முத்துமீனா ஆகியோர் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்றவர்களை ஜே.கே பென்னர் நிதி நிறுவனம் மற்றும் சாஜர் அறக்கட்டளை சார்பாக வாழ்த்தினர். கலந்து கொண்ட அனைவருக்கும் தினமலர் மற்றும் ஆசிர்வாத் சார்பாக பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.