Monday , June 16 2025
Breaking News
Home / செய்திகள் / திருவிழா போல் பிரமாண்டமாக நடந்த திம்மரசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா..!
MyHoster

திருவிழா போல் பிரமாண்டமாக நடந்த திம்மரசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா..!

தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் நடுநிலைப் பள்ளியின் 99-வது ஆண்டு விழா திருவிழா போல் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா அருகே உள்ளது திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 99-ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் படித்த மாணவ,மாணவிகள் தற்பொழுது நல்ல உத்தியோகத்தில் தொழில் அதிபர்களாக, கல்வியை போதிக்கும் ஆசிரியர்களாக, மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளாக, மருத்துவ சேவையை வழங்கும் செவிலியர்களாக, அரசு ஊழியர்களாக தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் 99-வது ஆண்டு விழாவை பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்துவது என முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர். பின்னர் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினர்.இதற்காக முன்னாள் மாணவர்களிடம் அதற்குண்டான ஆலோசனைகள் செய்யப்பட்டு பிரம்மாண்டமான விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை திம்மரசநாயக்கனூர் நடுநிலைப்பள்ளி வளாகம் அருகே உள்ள ஊர் மந்தையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு பள்ளியின் 99 -ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சத்தியஷீலா தலைமையில் நடைபெற்ற இவ்விழா முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள், திம்மரசநாயக்கனூர் கிராம முதன்மைக்காரர்கள் ஏற்பாட்டில் தனியார் பள்ளிகளையும் மிஞ்சும் வகையில் கலைநிகழ்ச்சிகள்
மிகப் பிரமாண்டமாக
நடைபெற்றது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பேச்சுப்போட்டி மற்றும் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தினர்.


மிகக் குறைந்த காலத்தில் ஒத்திகை பார்த்து இவ்வளவு அபார திறமையுடன் நடனமாடிய மாணவ,மாணவிகளை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பாராட்டிக் கொண்டே இருந்தை காண முடிந்தது.

விழா தொடங்கிய மாலை 5.00 மணியில் இருந்து விழா முடிந்த இரவு 10.00 மணி வரை அந்த இடத்தை விட்டு மாணவ, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு செல்லாமல் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர் என்பது இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் திருவிழா போல் நடந்த இந்த விழாவை காண ஊர் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மகிழ்ச்சியுடன் கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தனர்.

இவ்விழாவில் தொழிலதிபர் டி.டி.கே நிறுவனத் தலைவர், மற்றும் தன்னார்வலர் ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஏ.கே.அழகர், பி.சர்க்கரைப்பாண்டி, ஏ.பாண்டீஸ்வரன் என்ற ஈஸ் காளை, பி.ரவிச்சந்திரன், பா.மகாராஜன், பா.நவநீதன், தோழர் ராமசாமி, தொ.ராஜா மொ.பரமன், க.ரெங்கசாமிகோன் மற்றும் வி.அழகர்சாமி, வண்டிக்கார செல்வம் ஆகியோருடன் 2006 ஆம் வருடத்தில் படித்த மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களுக்கும், ஊர் பெரியவர்களுக்கும், செய்திகளை சேகரிப்பதற்காக வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கும் சால்வை அணிவித்து பள்ளியின் சார்பாக மரியாதை செய்யப்பட்டது.

விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியஷீலா மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் திம்மரசநாயக்கனூர் பள்ளியில் படித்து, அதே பள்ளியில் ஆசிரியராக தற்போது பணி புரியும் சக்திவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பள்ளி சிறப்பாக செயல்பட்டு வர உறுதுணையாக உள்ள தலைமை ஆசிரியர் சத்தியஷீலாவுக்கு சிறந்த தலைமை ஆசிரியர் விருதும், மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை முன்னாள் மாணவர்கள் வழங்கி கௌரவித்தனர்.

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES