
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நரிமேடு, பீ.பீ.குளம், கட்டபொம்மன் நகர், மருதுபாண்டியர் நகர், காலாங்கரை போன்ற பகுதிகளில் மாநகர் வடக்கு 2-ஆம் பகுதி கழகச் செயலாளர் வி.கணேசன் தலைமையில் வீடு,வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறும் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
இந்நிகழ்வில் பொறுப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ், அவைத்தலைவர் எஸ்.முருகன், வட்டச் செயலாளர்கள் பி.பால்பாண்டி, உதயா, சுரேஷ், மகேந்திரன் மற்றும் கே.எஸ்.முத்துக்குமார், எஸ்.ரவி,கோபால், எம்.மணிபிரபு உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.