Saturday , April 19 2025
Breaking News
Home / செய்திகள் / ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்
MyHoster

ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

சென்னை: ரவுடிசம் மற்றும் லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை அளிப்பேன் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். குற்றவாளிகளை பிடிக்க முன்னுரிமை அளிப்பேன். சென்னை எனக்கு புதிது அல்ல. எல்லா பொறுப்புகளிலும் பணிபுரிந்துள்ளேன்.

புள்ளி விவரங்களின் படி சென்னையில் குறைவான குற்றங்கள் தான் நடக்கிறது. @subtitle@நடவடிக்கை@@subtitle@@ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை அளிப்பேன். ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும். ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டப்படும்.

போக்குவரத்து சிக்கல்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். போலீஸ் அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போது தான் குற்றங்கள் நடப்பது குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES