புதுடில்லி: டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் காங்., எம்.பி ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தேர்தலில் மீதமுள்ள வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் வகையில் ஆலோசனை நடந்ததாக தெரிகிறது. கார்கே விளக்கம்இது குறித்து கார்கே எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரசின் நல்லாட்சியால் சேமிப்பு, நிவாரணம், வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு கொண்ட மாநிலமாக ராஜஸ்தான் மாறியது. இன்று ராஜஸ்தானின் சட்டசபை தேர்தல் குறித்து மத்திய தேர்தல் குழுவின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மீண்டும் எங்களை ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.