Saturday , June 14 2025
Breaking News
Home / Politics / தமிழகத்தில் ராகுல், கார்கே பிரச்சார திட்டம் தயார்
MyHoster

தமிழகத்தில் ராகுல், கார்கே பிரச்சார திட்டம் தயார்

தமிழகத்தில் ராகுல், கார்கே பிரச்சார திட்டம் தயார்

தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த திட்டத்தை தயாரித்து, ஒப்புதலுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம் தொடங்குகிறார். வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சில இடங்களில் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.

இதற்கிடையில் தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கும் பிரச்சார திட்டத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தயாரித்து, ஒப்புதலுக்காக டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது.

அதன்படி ராகுல்காந்தி, முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து 2 இடங்களில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாகவும், கார்கே மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் ஓரிரு இடங்களில் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் ஏப்.11-ம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Admin

Check Also

New Title

News News

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES