Saturday , June 14 2025
Breaking News
Home / Politics / அறிக்கை:
MyHoster

அறிக்கை:

இரண்டு நாட்களுக்கு முன் புது டெல்லி இரயில் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் லோகோ பைலட்கள் உடன் சந்திப்பு மேற்கொண்டு அவர்கள் பணியில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து தெரிந்துகொண்டார்.

இந்திய இரயில்களை இயக்கும் லோகோ பைலட்கள் மற்றும் அசிஸ்டன்ட் பைலட் பணியிடங்கள் 22 சதவிகிதம் நிரப்பப்படாமல் உள்ளது. ஆகையால் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணிபுரிகின்றனர். நீண்ட தூர இரயில்கள், தூக்கம் மற்றும் ஓய்வு இல்லை, அத்துடன் மன அழுத்தத்தில் வேலை செய்கின்றனர்.

ஏற்கனவே லோகோ பைலட், அசிஸ்டன்ட் பைலட், இரயில் கிரௌண்ட் மேனேஜர், ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் மானேஜர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. கடந்த ஜூன் 17 ஆம் தேதி காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்துக்கு முன்னதாக 5000 லோகோ பைலட்டுகள் நியம்மிக்கப்படவுள்ளதாக இந்திய இரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இரயில் விபத்து நடந்து அடுத்த நாள் ஜூன் 18 ஆம் தேதி 18,000 என அதிகரித்து அறிவித்ததன் பின்னணி என்ன? உண்மையில் அதை விட அதிகமான காலியிடங்கள் இரயில்வேயில் உள்ளது. அத்துடன் ஜூன் 18 அன்று அறிவிக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்பட எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஒரு கூட்ஸ் இரயில் என்பது 6 முதல் 7 மணி நேரம் நிற்காமல் பயணிக்கிறது. இரயில் இயக்கும் என்ஜின் அறையில் கழிவிட வசதி இல்லாததால் முக்கியமாக பெண் ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் லோகோ எஞ்சினில் கழிப்பறை வசதி உள்ளது. ஆனால் இந்தியாவில் இயங்கும் லோகோ எஞ்சினில் கழிப்பறை வசதி அமைக்கப்படாமல் உள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அதேபோல நீண்ட நேரம் வெயிலில் பயணிக்கும் எஞ்சினில் குளிர்சாதன வசதி இல்லாதது பைலட்டுகளுக்கு கடுமையான சிரமத்தை கொடுக்கிறது. ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் எஞ்சினில் இந்த வசதியும் உள்ளது.

இந்தியாவில் அதிகப்படியான கட்டணம் வசூலித்து இயங்கப்படும் இரயில் தான் வந்தே பாரத். ஆனால் அந்த இரயிலில் பல பகுதிகளில் இயங்கும் இரயில்கள் 50% க்கு மேல் டிக்கட் பதிவு செய்யப்படாமல் காலியாக பயணிக்கிறது. இதுபோன்ற தேவையில்லாத செலவுகளுக்கு பதிலாக சாதாரண மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இரயிலில் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்த பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

ஏ.சி. வசதி உள்ள பயணத்தை மேற்கொள்ள முடியாத மக்களின் தேவைகளில் இருந்து திசை திரும்பி, சாதாரண மக்களின் பயணத் தேவைகளில் கவனம் செலுத்தாமல் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு வந்தே பாரத் இரயில் மீது கவனம் செலுத்தி தவறு இழைத்துள்ளதாக வந்தே பாரத் ரயிலின் முதல் வகையை உருவாக்கிய திரு சுதன்ஷு மணி அவர்கள் கருத்தை பதிவு செய்துள்ளார்.

1924 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த இரயில்வே பட்ஜெட் 2016 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு ரத்து செய்து பொதுப் பட்ஜெட் அறிக்கையில் இரயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைத்தனர். இந்திய இரயில்வே தனி பட்ஜெட் இருந்திருந்தால் இரயில்வேக்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து வெளியே தெரிந்திருக்கும். ஆனால் அவையெல்லாம் பாஜக அரசால் மூடி மறைத்ததும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இரயில் விபத்துகள் ஏராளமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம்.

மத்திய பாஜக அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்திய இரயில்வேக்கான தனி பட்ஜெட் முறையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்பி, இரயில்வேக்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து, அதை முறையாக பராமரித்து, சாதாரண மக்கள் வசதியாக பயணம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

About Admin

Check Also

New Title

News News

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES