கடந்த 20.12.21 திங்கட்கிழமை திருவண்ணாமலையில் ‘கரூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்’ நடத்திய
சத்குரு சுவாமி ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர் குரு பூஜை நடைபெற்றது.
இந்த ஆன்மீக நிகழ்வில் திருவண்ணாமலை மகான் இடைக்காடர் குறித்து ஆன்மீகப் பேச்சாளர் சிவராமன் உரையாற்றினார்.இவ்விழாவை நவநாத சித்தபெருமான்களின் ஞான வழித்தோன்றலும், சத்குரு தவபாலேஸ்வரர் சுவாமிகளின் சீடருமான சுவாமி சித்தகுருஜி முன்னின்று நடத்தினார்.
சுவாமி சித்தகுருஜி ‘குருவின் மகிமை’ என்ற தலைப்பில் சத்சங்கம் நடத்தி குருபூஜை விழாவினைத் தொடங்கி வைத்தார். குருபூஜை விழாவில் கலந்துகொண்டு சென்னை சிவலோக திருமடம் தவத்திரு. வாதவூரடிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் திருமடம் தவத்திரு. முனைவர் சிதம்பர சோணாலச சுவாமிகள், ஸ்ரீ கமலா பீடம் அருட்திரு. சீதா சீனிவாச சுவாமிகள்,
ஸ்ரீ பிடாரி காளி பீடம் அருட்திரு. சுரேந்திரநாத் சுவாமிகள் ஆகியோர் அருளாசியுரை வழங்கினர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த கர்நாடக சங்கீத வித்வான் வசுமதி மாதவன் அவர்களும், திருவாசகப் பித்தர் வாதவூரடிகள் அவர்களும் ஆன்மீக செறிவு மிக்க இசை விருந்து படைத்தனர்.
திருவண்ணாமலை மத்திய அரசு வழக்கறிஞர் உயர்திரு. சங்கர், ஸ்ரீ வித்யாதேவி மாதங்கி ஞானபீடம் அருட்திரு.முருகன், மகா சொர்ண வாராகி சக்தி பீடம் அருட்திரு. நாகசுந்தரம் சாமிகள், உயர்திரு. சிதம்பரம் கோபி உள்ளிட்ட சான்றோர் பலர் சிறப்புரையாற்றினர். முன்னதாக திருமதி நந்தினி கிருஷ்ணகுமார் வரவேற்புரை நிகழ்த்திய தோடு விழா நிகழ்வினை நேர்த்தியாக தொகுத்தும் வழங்கினார்.
நிறைவில் சிதம்பரம் சிவயோக சித்தர் பீடம் அருட்திரு. ஜெயகோபால் சுவாமிகள், உயர்திரு. செல்லபதி ரவிச்சந்திரன் நன்றி கூறினர். குருபூஜை விழா நிறைவாக சிவனடியார்கள், திருநங்கைகள், கிராமிய கலைஞர்கள், சுமங்கலிகள், குழந்தைகள் ஆகியோருக்கு சுவாமி சித்தகுருஜி ஆடை தானம் வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட
அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் திருமதி வசுமதி மாதவன் வழங்கிய ஆதிமூல பஞ்சாட்சர அகண்ட ஜெப சங்கீர்த்தனமும் , தவத்திரு வாதவூர் அடிகள் அருளிய திருப்பதிக இசை நிகழ்ச்சியும் சிறப்பாக இருந்தது. சபையோர் அனைவரையும் உடன் பாடவும் ஆடவும் வைத்தது. அதேபோன்று, தவத்திரு முனைவர் சிதம்பர சோணாசல ஸ்வாமிகள், சத்குரு ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர் சுவாமிகளுக்கு நிகழ்த்திய மங்கள ஆர்த்தி நிகழ்வில் பரவசமும் ஏகாந்தமும் நிறைந்திருந்தது.
மொத்தத்தில் ஓர் அருமையான ஆன்மிக விழா. ஓர் உயர்ந்த சீடர் ஓர் உன்னத குருவிற்கு நடத்திய குருபூஜை விழாவாக அமைந்திருந்தது.