மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை நகராட்சியில் அடிப்படை வசதியின்றி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆதார் இ-சேவை மையத்தால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் வெட்ட வெளியில் வெயிலில் நின்று ஆதார் திருத்தம் மேற்கொள்கிறார்கள் இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ஆகையால், ஆதார் இ-சேவை மையத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான வேறு ஒரு இடத்திற்கு மாற்றவோ அல்லது அந்த இடத்தில் அடிப்படை வசதி செய்து தருமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மணப்பாறை நகராட்சி ஆணையருக்கு மணப்பாறை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

