Thursday , November 21 2024
Breaking News
Home / தமிழகம் / சசிகலா வெளியே வந்த பிறகு அவர் குறித்து ஆலோசிக்கப்படும் – பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
MyHoster

சசிகலா வெளியே வந்த பிறகு அவர் குறித்து ஆலோசிக்கப்படும் – பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய பொருளாதார நிலவரப்படி மக்களை பாதிக்காத பட்ஜெட்டை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. பிரதமர் மோடி எது செய்தாலும் அதனை எதிர்ப்பதற்காக சில கட்சிகள் உள்ளன.

இந்த பட்ஜெட்டிற்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. பட்ஜெட் குறித்து பேசுவதற்கு கமல் ஹாசன் பொருளாதார மேதை கிடையாது. 32 ஆண்டுகள் அரசியலில் ஆட்சி செய்து வரக்கூடிய கட்சி அதிமுக. இன்று ஆளுகின்ற கட்சி மக்களால் ஆட்சி செய்கிற கட்சி. எனவே மக்கள் மீதான அக்கறை மத்திய, மாநில கட்சிகளை காட்டிலும் கமல் ஹாசனுக்கு இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. நிர்மலா சீதாராமன் தமிழ் மகள் என்ற உணர்வுடன் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டை படித்துள்ளார்.

இது தமிழர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் வழங்கியதுடன் தமிழுக்காக பிரதமர் மோடி அமெரிக்காவில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார். உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு செல்லும் முனைப்பில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதேபோன்று பிரதமர் மோடியும் செயல்பட்டு வருகிறார்.

இதற்கு உதாரணம் சீன அதிபரை தமிழகத்திற்கு அழைத்து வந்து மாமல்லபுரத்தில் கூட்டம் நடத்தியது. தமிழகம் பாதுகாப்பான மாநிலம், கலாச்சாரம் நிறைந்தது என்பதற்காகவே மாமல்லபுரம் அழைத்து வந்துள்ளார். திண்டுக்கல் லியோனி பணத்திற்காகவும் கைதட்டல்களுக்காவும் பேசக்கூடியவர். அவர் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. அகழ்வாராய்ச்சியில் நாடு முழுவதும் 5 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஆவின் பால் விலை ஏற்றத்திற்கு பிறகு தற்போது தனியார் பால் விலை ஏற்றப்பட்டுள்ளது. அதாவது கொள்முதல் விலைக்கு ஏற்ப பால் விலை ஏற்றப்பட்டுள்ளது. பாலில் கலப்படம் குறித்து நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது கலப்படம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. பாலில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

பாலில் கலப்படம் செய்வது குறித்து புனேவில் உள்ள காசியாபாத்தில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஆவினுக்கு வரக்கூடிய பால் மற்றும் தனியார் பரிசோதனை செய்யப்படுகிறது. போராட்டக்காரர்கள் அரசு அதிகாரிகளையும், ராணுவ அதிகாரிகளையும், போலீசாரை தாக்கக்கூடிய பட்சத்தில் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கவும், இந்திய அரசின் பொது சொத்துக்களை சேதம் செய்பவர்களையும் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும் ராணுவத்தினருக்கும் உள்ளது.

துப்பாக்கிச்சூடு எந்த அரசும் விரும்பி செய்யாது கலவரத்தை அடக்குவதற்காக அரசு எடுக்கக்கூடிய முடிவுகள். வளர்ந்துவரும் நாடுகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிந்தனையுடன் வருகின்றனர். எனவே தீவிரவாதிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் அதன் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக உள்ள கட்சியாகத் திமுகவை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஒன்றரை ஆண்டுக்கு பிறகு நடைபெறும் தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். சசிகலா வெளியே வந்த பிறகு அவர் குறித்து ஆலோசிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES