கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தற்போது நடந்து வருகிறது ஏராளமானோர் கலந்து கொண்ட வண்ணம் இருக்கிறார்கள் இதில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை சிறிதுநேரத்தில் வழங்க உள்ளனர். மற்ற மாணவ மணிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர் குரல் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
