Tuesday , July 15 2025
Breaking News
Home / தமிழகம் / உடனே விண்ணப்பிக்கவும்..! தமிழக அரசு வெளியிட்ட 2299 கிராம உதவியாளர் வேலைகள்..!
MyHoster

உடனே விண்ணப்பிக்கவும்..! தமிழக அரசு வெளியிட்ட 2299 கிராம உதவியாளர் வேலைகள்..!

உடனே விண்ணப்பிக்கவும்..! தமிழக அரசு வெளியிட்ட 2299 கிராம உதவியாளர் வேலைகள்..!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கு ஒரு கிராம உதவியாளர் நியமிக்கப்படுகிறார். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்பட வேண்டும்.

அடிப்படைக் கல்வியை மட்டுமே தகுதியாகக் கொண்ட இப்பணிக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணிகளுக்கான பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு வருவாய்த் துறை

பணி: கிராம உதவியாளர்

மொத்த காலியிடங்கள்: 2299மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:அரியலூர் – 21,சென்னை 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் – 66, திண்டுக்கல் – 29, தருமபுரி – 39, ஈரோடு – 141, காஞ்சிபுரம் – 109, கரூர் – 27, கிருஷ்ணகிரி -33, மதுரை – 155, மயிலாடுதுறை – 13, நாகப்பட்டினம் – 68, நாமக்கல் – 68,பெரம்பலூர் – 21, புதுக்கோட்டை – 27, ராமநாதபுரம் – 29, ராணிபேட்டை 43, சேலம் – 105,சிவகங்கை – 46, தஞ்சாவூர் – 305, தேனி-25, திருவண்ணாமலை – 103, திருநெல்வேலி – 45, திருப்பூர் – 102, திருவாரூர் – 139, திருவள்ளூர் – 151, திருச்சி – 104. தூத்துக்குடி – 77, தென்காசி – 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் – 38, வேலூர் – 30, விழுப்புரம் – 31.

தகுதி: குறைந்தபட்ச கல்வித்தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை

பதவி உயர்வு: 10 ஆண்டுகளுக்கு பின்பு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும்.

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 21 – 32, 37க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெற்றோரை இழந்தோர், ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு முன்னுரிமை அளிக்கப்படும்.விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பிக்க வேண்டும்..

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES