மதுபான கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மதுபானக்கடைகளை மூடக்கோரி மனுக்கள் கொடுத்து வருகின்றனர் அதுபோல மதுபான கடைகளில் நிற்கும் குடிமகன்கள் இடம் நிவாரண நிதியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் உண்டியலில் வசூல் செய்து அதை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இருந்ததை பார்த்து ஒரு சில குடிமகன்கள் விழிப்புணர்வு வந்திருக்கும் என்று நம்புவதாக இந்நிகழ்ச்சி மக்களின் மனதில் சென்றடைந்தது என்பதை நாம் மறுக்க இயலாது.
குறிப்பாக எந்த ஒரு நல்ல விஷயங்களையும் ஊடகங்கள் பிரித்துக் காண்பிப்பது வியப்பாக இருக்கிறது…
அப்துல்கலாம் அய்யா அவர்களே நாளைய இந்தியா இளைஞர்களின் கையில் என்று கூறியதை இப்பொழுது நினைவுபடுத்த விரும்புகிறோம்.
like
இளைஞர்கள் ஒரு பக்கம் டாஸ்மாக்கில் நின்று நிவாரணம் சேகரிப்பதும் மறுபக்கம் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதும் இந்த தமிழகத்தில் அதுவும் தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்த இளைஞர்களால் அரங்கேறிக் கொண்டிருக்கிறது…
இந்த வித்தியாசமான முயற்சிகளை எடுத்த இந்த இளைஞர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கும் இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.