தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து தனித்து நின்று போட்டியிடுவதே வெற்றிதான் என்று க.பாலமுருகன், மாநில பத்திரிக்கை துறை தொடர்பாளர் கரூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக இன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல்கலாம் அய்யாவின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் சாகுல் அமீது, பிரபாகரன், பிரின்ஸ் ராஜா, லோகேஷ், ராஜா, பாலசந்தர் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கூறியதாவது, வரும் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்தனர்.

மேலும் அனைத்து தொகுதிகளிலும் நல்ல நோக்கங்களுடனும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட திறமை மிக்க நபர்கள் தேர்தலில் நிக்க முன்வந்துள்ளதாகவும் மேலும் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவர்கள் எங்களை அணுகலாம் என்றும் தெரிவித்தனர்.
