கரூரில் எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரில் ராஜ வாய்க்கால் அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டு பொதுமக்களுக்கு நடக்கமுடியாமல் குப்பை மேடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. மேலும் குப்பைகள் சேர்ந்து ராஜா வாய்க்காலில் கலந்து சாக்கடை அடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு வியாதிகள் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
வித்தியாசமான கொடிய கொரோனா போன்ற நோய்கள் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இதுபோன்ற சாக்கடைக்குள் வசிக்கும் நிலை சக்தி நகருக்கும் எஸ்பிஐ காலணி மக்களுக்கும், இந்த நிலை நீடிக்குமானால் சுகாதாரக் கேடு ஏற்படுவதில் ஐயமில்லை.
கரூர் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு சரி செய்யுமாறு எஸ்பிஐ காலனியில் குடியிருக்கும் மக்கள் சார்பாக சமூக ஆர்வலர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் திரு. ஆண்ட்ரூ முருகன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். நகராட்சி நிர்வாகம் தலையிட்டு பொதுமக்களுக்கு நடை பாதை திறந்து வைக்குமா? என்று பொருத்திருந்து பார்ப்போம்.
