சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்கின்றனர். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.மதிவாணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மே 16-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று …
Read More »சென்னை மாநகராட்சியில் புதிதாக 200 நகர்ப்புற மருத்துவமனைகள்: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
சென்னை: சென்னையில் 200 நகர்ப்புற மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திரு.வி.க.நகர் எம்எல்ஏ தாயகம் கவி, ‘‘புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனை 24 மணி நேர மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அங்கு 60 படுக்கைகள் மட்டுமே உள்ளன. எனவே, இந்த மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்‘‘ என்றார். இதற்குப் பதில் …
Read More »தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 11, 12, 13-ம் தேதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் …
Read More »சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பழனிசாமி கோரிக்கை
சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு,சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதுடன், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. மதம், சாதிச் சண்டைகள், கட்டாயப் பஞ்சாயத்துஇல்லை. ஆளும் கட்சியின் தலையீடு அறவே கிடையாது. 2013-ல் காவல் துறைக்கு ஆன்லைனில் புகார் அளிக்கும்முறையை அறிமுகப்படுத்தினோம். ஆனால், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் …
Read More »அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை வேளைகளில் சிற்றுண்டி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சராக பொறுப்பேற்று ஓர் இரண்டு நிறைவை ஒட்டி, சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் 5 முக்கிய அறிவிப்புகளை கூறினார். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க புதிய திட்டம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் ; அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும். முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு …
Read More »தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது; தமிழகத்தில் சில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று 5.5.2022 நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் …
Read More »பள்ளிக்கூடத்திற்கு அருகே கழிவுநீர் தேக்கம் கட்டும் முயற்சியில்…
கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் உள்ள ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் அருகே சாலையின் இருபுறமும் சாக்கடை கட்டி அதில் வரும் கழிவு நீரை பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் உள்ள வெற்றிடத்தில் நிரப்பி சுகாதாரக்கேடு உருவாக்கும் வகையில் சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பகுதிக்கு அருகில் பல குடியிருப்புகள் அமைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். நிர்வாகம் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? பள்ளி …
Read More »இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்திய பேருந்து உரிமையாளர்
கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஹெல்ப் 2 ஹெல்ப் என்ற இரத்ததான குழு அரசு மருத்துவமனையில் இருக்கும் ஏழை எளியோருக்கு இரத்ததானம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. தாந்தோன்றிமலை – D கூடலூர் செல்லும் நகரப் பேருந்தில் நமது ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பை பற்றிய பெரிய போஸ்டரை பஸ்ஸின் பின்புறமும் உட்புறமும் ஒட்டிவிழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் வெள்ளியங்கிரி பஸ் உரிமையாளர் கிரி அவர்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்யும் …
Read More »ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் இரத்த தானம்…
இன்று ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் அவர்கள் தொடர்ந்து 55 வது முறையாக கரூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் இரத்த தானம் அளித்தார். மேலும் ஹெல்ப்2ஹெல்ப் (Help2Help) ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சிவராமன், திருமதி. திலகவதி, திருமதி. மகேஸ்வரி, திரு. கனகராஜ், திரு. பாலமுருகன், காவல் டுடே தலைமை நிருபர் திரு. …
Read More »கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சியில் ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானம் கோரி மனு…
கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஜல்லிப்பட்டி யைச் சார்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய நாங்கள் பல வருடங்களாகவே விளையாட்டு மைதானம் இன்றி சரிவர விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளோம். மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடக்கூடிய தகுதி இருந்தும் பயிற்சி எடுப்பதற்கான மைதானம் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் காரணத்தினால் விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆதலால் தயவுகூர்ந்து விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை …
Read More »