சண்டிகர்: பஞ்சாப் போலீஸ் உளவுத் துறை தலைமை அலுவலகம் மீது நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக என்ஐஏ மற்றும் மத்திய உளவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாப்பின் மொகாலியில் உள்ள போலீஸ் உளவுத் துறை தலைமை அலுவலகம் மீது நேற்று முன்தினம் காலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது. இதுகுறித்து …
Read More »Daily Archives: May 11, 2022
ராஜ்யசபா எம்பி பதவி ஒதுக்க திமுகவிடம் கேட்போம்: கே.எஸ்.அழகிரி தகவல்
ஈரோடு: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கேட்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில், கொடுமுடியில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 10 நாள் நடைபயணம் நேற்று தொடங்கியது. நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் …
Read More »துணைவேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்குவது உட்பட 20 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம்
சென்னை: மருத்துவம், வேளாண்மை, சட்டம்மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும்மசோதா உட்பட 20 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை தமிழகஅரசுக்கே வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிமுகம் செய்தார். பின்னர், 1976 -1998 காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வழக்கிழந்த 91 சட்டங்களை நீக்குவதற்கான நீக்கறவு மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். ஊராட்சி செயலர்கள் மீது …
Read More »தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16-வது தமிழக சட்டப்பேரவையின் 3-வது கூட்டம் மார்ச் 18-ம்தேதி தொடங்கியது. அன்று பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடந்தது. விவாதங்களுக்கு நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர். துறைவாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்.6தொடங்கி நேற்று …
Read More »2 இந்தியாவை உருவாக்குகிறார் மோடி: ராகுல் காந்தி தாக்கு
தஹாத்: குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை குஜராத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தஹாத் மாவட்டத்தில் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். அங்கு நேற்று நடந்த ஆதிவாசி சத்தியாகிரக பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமர் ஆனார். அதற்கு முன் அவர் குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத்தில் அவர் தொடங்கிய பணியும், நாட்டில் தற்போது அவர் செய்யும் பணியும் …
Read More »மே 16-ல் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்கின்றனர். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.மதிவாணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மே 16-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று …
Read More »காவல் நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷ் சகோதரரிடம் சிபிசிஐடி விசாரணை
சென்னை: சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் கடந்த மாதம் 18-ம் தேதி கெல்லீஸ் சிக்னல் அருகே வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த பட்டினப்பாக்கம் விக்னேஷ் (25), அவரது நண்பர் திருவல்லிக்கேணி சுரேஷ் (28) ஆகிய இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த விக்னேஷ் மறுநாள் உயிரிழந்தார். அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தது, பிரேதப் …
Read More »சென்னை மாநகராட்சியில் புதிதாக 200 நகர்ப்புற மருத்துவமனைகள்: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
சென்னை: சென்னையில் 200 நகர்ப்புற மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திரு.வி.க.நகர் எம்எல்ஏ தாயகம் கவி, ‘‘புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனை 24 மணி நேர மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அங்கு 60 படுக்கைகள் மட்டுமே உள்ளன. எனவே, இந்த மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்‘‘ என்றார். இதற்குப் பதில் …
Read More »10-ம் வகுப்பு வினாத்தாள் கசிவு எதிரொலி: ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் கைது
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி முதல் மே மாதம் 7-ம் தேதி வரை 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. அப்போது தினமும் வினாத்தாள்கள் கசிந்து பரபரப்பை உண்டாக்கின. இது தொடர்பாக 25 அரசு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் நாராயணாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இவருக்கு சொந்தமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் உள்ளன. …
Read More »சாதி, மத துவேஷங்களுக்கு இந்த மண்ணில் இடமில்லை; சமூக நல்லிணக்க தோட்டமாக திகழும் தமிழகம்: பேரவையில் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: மத துவேஷங்களுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை. சாதி,மத மோதல்கள் இன்றி சமூக நல்லிணக்க தோட்டமாக தமிழகம் திகழ்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் புதிய முதலீடுகள் மாநிலத்தை நோக்கி வருகின்றன. இந்தியாவில் அமைதியான, பாதுகாப்பான மாநிலம்என்ற நற்பெயர் மீண்டும் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் சட்டத்தின் ஆட்சிநிலை நிறுத்தப்பட வேண்டும். எந்த …
Read More »