மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நவம்பர் 25 ஆம் தேதி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மதுரையில் கூறினார்
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்:-
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம் தமிழக அரசும், காவல்துறையும் அறநிலையத்துறையும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். இதற்காக வரும் நவம்பர் 25ஆம் தேதி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்.
ஏற்கனவே 1996 ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதிக்கும் படியாக தொடர்ந்து மலை மீது தீபம் ஏற்றாமல் மோட்ச விளக்கு ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்றப்படுகிறது இது முறை அல்ல. ஜோதி விளக்கு ஏற்றக்கூடிய தூணில்தான் ஏற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கும் அங்கு அனுமதி அளிப்பதில்லை.மேலும் மாற்று மதத்தவர்கள் அங்கே சென்று ஆடு, கோழி போன்றவற்றை வெட்டுகிறார்கள். இந்த அரசு மதம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாத அரசாக இருப்பதால் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபு அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் உடனடியாக அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். மக்கள் அனைவரும் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி தீபம் ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும்.
மக்களுக்கு அனுமதி என்றால் பதற்றம் உருவாக்க நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் :
ஏன் பதற்றம் உருவாக வேண்டும் ஏன் மக்கள் போராட வேண்டும் இந்த நிலையை உருவாக்கியதே இந்த அரசாங்கம் தான் புதிதாக கலாச்சார மையம் என்று உருவாக்குவதாக கூறியுள்ளார்கள் உண்மையாக கலாச்சாரம் பண்பாடு முதல் பரதநாட்டிய முறை அனைத்தும் கோயில்களிலேயே உள்ளது தனியாக புதிதாக இவர்கள் தொடங்குவது போல் கூறுவது நாடகம்தான் அது மேலும் கொள்ளை அடிக்க ஒரு புது வழியை தேடுகிறார்கள் அனைத்து கோயில்களில் இருந்தும் பெறப்படும் வருமானம் கோயில்களின் பராமரிப்பிற்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வரும் நவம்பர் 25-ஆம் தேதி பொதுமக்களை திரட்டி திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு மாபெரும் போராட்டம் கண்டிப்பாக நடத்துவோம்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது இந்து முன்னணி பொதுச்செயலாளர் கலாநிதி மாறன், கோட்டச் செயலாளர் அரசபாண்டி, மாநில செயலாளர் சேவுகன் உட்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.