மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், தோட்டக்கலைத் துறை சார்பாக வழங்கப்படும் ஹைபீரிட் சீடு விதைகளை பரிசோதனை செய்யாமல் வழங்குவதால் அதன் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை உண்பதால் மக்களுக்கு மலட்டுத்தன்மை, புற்றுநோய் மற்றும் மரபணுக்களில் மாற்றம் உண்டாகிறது.
மேலும் தரம் இல்லாமல் உள்ளது இந்த விதைகளை வாங்கி விவசாயத்திற்காக பயன்படுத்தும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே அரசு பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்த தரமான விதைகளை மட்டுமே சான்றிதழுடன் வழங்க வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாத தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தி பேசினார்.