சீனாவில் மட்டுமே கொரோனோ வைரஸால் இறப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த 22 வயது இளைஞன் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
திரிபுராவின் Bishalgarh-வை சேர்ந்தவர் Sahajan Mia. இவருக்கு Manir Hossain(22) என்ற மகன் உள்ளார். கிரிக்கெட் வீரரான இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் எந்த ஒரு வேலையும் கிடைக்காத காரணத்தினால், கடந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் இருக்கும் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை, Manir Hossain குடும்பத்தினரை தொடர்பு கொண்ட, அங்கிருக்கும் வேலை செய்யும் நபர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் Manir Hossain மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
அதன் பின் மகன் இறப்பு குறித்து குடும்பத்தினரிடம் அவர்கள், மகன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாகவும், அவருக்கு கொரோனோ வைரஸின் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் மத்திய சுகாதார அமைச்சகம் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இருப்பினும் Manir Hossain-ன் தந்தை தன்னுடைய மகனின் உடலை கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அப்படி அவர் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார் என்பது உறுதியான சீனாவிற்கு பின் வெளிநாட்டில் உயிரிழந்த முதல் நபராக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால்,இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சகம் அறவே மறுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனோ கிருமித் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சகம், இந்தியர்கள் யாரும் கண்காணிப்பு வளையத்தில் இல்லை எனத் தெளிவுபடுத்தி உள்ளது.
ஜனவரி 30-ஆம் திகதி மாலை வரை இதுதான் உண்மை நிலை என்றும் மலேசிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.