மதுரை மத்திய சிறையில் நபார்டு தேசிய வங்கி நிதி உதவியுடன்,சாஜர் அறக்கட்டளை சார்பாக ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் 30 நாள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது.
மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் அவர்கள் சிறையில் உள்ள போதே வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் சிறுதானிய உணவு பொருட்கள் தயார் செய்யப்படும் பயிற்சி வகுப்பு மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு நபார்டு தேசிய வங்கி நிதி உதவியுடன், சாஜர் அறக்கட்டளை சார்பாக 30 நாள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
அதன் துவக்க நாளான நேற்று மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் மற்றும் சாஜர் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஜாஸ்மின் ராஜ்குமார் மற்றும் நபார்டு வங்கி துணை பொது மேலாளர் சக்திபாலன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
கே.ஆர்.எஸ் மருத்துவமனை H.R.திவ்யா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் சாஜர் டிரஸ்ட் சி.இ.ஓ ஆர்.நசீம்பானு நன்றி கூறினார்.
இந்த பயிற்சி வகுப்பில் மதுரை மத்திய சிறை, பெண்கள் தனி சிறை சிறைவாசிகள், தலா 25 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
இதில் சிறுதானிய சத்துமாவு, கஞ்சி மிக்ஸ், சப்பாத்தி மிக்ஸ், அடை தோசை, மிக்ஸ், பணியாரம் மிக்ஸ், குதிரைவாலி சேவ், ஜிலேபி, குலோப் ஜாமூன், திணை அதிரசம்,வரகு அரிசி முறுக்கு, கவுனி அரிசி அல்வா, கட்லெட் ஆகியவை தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சியின் போது சிறுதானிய மூலம் தயார் செய்யப்படும் இனிப்பு கார வகைகள் உணவு வகைகள் ஆகியவை தயார் செய்யும் முறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் இவர்கள் மூலம் தயார் செய்யப்படும் சிறுதானிய உணவுப் பொருட்கள் மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறை சந்தையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வைக்கப்படும் என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்